Goldman Sachs Job Cut: 500 பேரை பணிநீக்கம் செய்து அதிரடி காண்பித்த கோல்ட்மேன் சாக்ஸ் குழுமம்... பணியாளர்களுக்கு பேரதிர்ச்சி.!

அமெரிக்க பெடரல் வட்டி விகிதம் உயர்வு, உக்ரைன் போர் காரணமாக வங்கியின் முதலீடுகள் பாதிப்பு உட்பட பல பிரச்சனை காரணமாக கோல்ட்மேன் நிறுவனம் பாதிக்கப்பட்டுள்ள்ளது.

Goldman Sachs (Photo Credit: Twitter)

மே 31, நியூயார்க் (World News): அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் தலைமையிடம் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் கோல்ட்மேன் சாக்ஸ் குரூப் இன்ஸ் (Goldman Sachs Group Inc), சர்வதேச அளவில் நிதி வழங்கும் நிறுவனம் ஆகும். இது வங்கி செயல்பாடுகளை முதன்மையாக வைத்து செயல்பட்டு வருகிறது.

கடந்த 2008ல் ஏற்பட்ட பங்குச்சந்தை சரிவு மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக 45,400 ஊழியர்களுடன் செயல்பட்டு வந்த நிறுவனம், அதிரடியாக 3,200 பேரை பணிநீக்கம் செய்து இருந்தது.

இந்நிலையில், பல ஆண்டுகள் கழித்து தற்போது சுமார் 500 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 500 பேரில் திறன் குறைவான பணியாளர்கள் முதல் முக்கிய அளவில் பணியாற்றும் நபர்களும் அடக்கம் என தகவல் விபரங்கள் தெரிவிக்கின்றன. Man Killed: உயிரிழந்த மனைவியை உயிருடன் கொண்டு வராத பூசாரி அடித்தே கொலை; பொய்யுரைத்த பூசாரிக்கு பகீர் சம்பவம்.!

பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க அமெரிக்க பெடரல் வட்டி விகிதம் உயர்வு, உக்ரைன் போர் காரணமாக வங்கியின் முதலீடுகள் பாதிப்பு உட்பட பல பிரச்சனை காரணமாக கோல்ட்மேன் நிறுவனம் பாதிக்கப்பட்டுள்ள்ளது. இதனால் பணிநீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிநீக்க நடவடிக்கை மூலமாக 600 மில்லியன் டாலர் ஊதியக்குறைப்பு இருக்கும். 2023-ன் முதல் காலாண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க மேற்படி பணிநீக்கம் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. நிதி நெருக்கடியை சமாளித்து முன்வர தேவையான நடவடிக்கையில் கோல்ட்மேன் நிறுவனம் இறங்கியுள்ளது.