India Rejects Canada PM Allegation: காலிஸ்தானிய பயங்கரவாதி கொலையில் மத்திய அரசுக்கு தொடர்பா?: கனடா பிரதமரின் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம்.!

காலிஸ்தானிய பயங்கரவாதி கொலை செய்யப்பட்டதற்கு இந்திய அரசின் தலையீடு காரணம் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டினுக்கும், அவரது அமைச்சர்களுக்கும் இந்திய அரசு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Govt of India | Justin Trudeau (Photo Credit: Twitter)

செப்டம்பர் 19, ஒட்டாவா (World News): கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் (Khalistan Tiger Force) புலிகள் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஹாதீப் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். இந்த கொலையை அரசியல் ரீதியாக சம்பந்தப்படுத்திய கனடிய அரசு அதிகாரிகள், அதுதொடர்பான விசாரணையை முன்னெடுத்து முதற்கட்ட அறிக்கையை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் சமர்ப்பித்தனர்.

இதுகுறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau), காலிஸ்தானிய அமைப்பு தலைவர் கொலைக்கும் - இந்திய அரசுக்கும் (Indian Government) தொடர்பு உள்ளது. எல்லைதாண்டி கனடிய மண்ணில் நடந்த படுகொலையை கனடா அரசு வன்மையாக கண்டிக்கிறது என கூறியிருந்தார். இந்த குற்றசாட்டுகள் நேரடியாக இந்திய-கனடா உறவுகளை பாதித்தது.

கனடாவில் வாழ்ந்து வரும் காலிஸ்தானிய (Khalistani Supporters) ஆதரவாளர்கள், சமீபகாலமாக இந்திய தூதரகம், இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தனர். இவை இலண்டன் மற்றும் அமெரிக்காவிலும் தொடர்ந்தது. இதனிடையே காலிஸ்தானிய ஆதரவு அமைப்பின் செயல்பாடுகள் கடந்த சில மாதமாகவே கனடாவில் உத்வேகமெடுத்து எங்கும் இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. Vijay Antony’s Daughter Dies by Suicide: நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை; 16 வயதில் விபரீத முடிவுக்கு காரணம் என்ன?.. மீளாத்துயரில் குடும்பத்தினர்..!

இவ்வாறான தருணத்தில் காலிஸ்தானிய அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகி கொல்லப்பட்டுள்ள நிலையில், அதற்கு இந்திய அரசு காரணம் என அந்நாட்டின் பிரதமர் கண்டனத்தை பதிவு செய்தார். மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட நிஜ்ஜார், தேசிய புலனாய்வு முகாமையால் தேடப்பட்டு வரும் குற்றவாளி ஆவார். இவர் தொடர்பான தகவலுக்கு என்.ஐ.ஏ ரூ.10 இலட்சம் சன்மானமும் அறிவித்து இருந்தது.

Canada PM Justin Trudeau (Photo Credit: Twitter)

ஜலந்தரில் நடந்த இந்து சாமியார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக நிஜ்ஜார் இருக்கிறார். இவரது கொலை வழக்குக்கு கனடா அரசு இந்திய அரசின் மீது குற்றசாட்டுகளை முன் வைத்தது தொடர்பாக, இந்திய அரசு தனது காட்டமான பதிலடியை தந்து இருக்கிறது.

இதுகுறித்து இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, "கனடா அரசின் குற்றசாட்டுகளை இந்தியா நிராகரிக்கிறது. கனடா பிரதமரின் அறிக்கை, வெளியுறவு அமைச்சரின் அறிக்கையை நாங்கள் பார்த்தோம். அதனை நிராகரிக்கிறோம். கனடாவில் எந்தவிதமான வன்முறை செயலிலும் இந்திய அரசு ஈடுபடவில்லை. Chennai Corporation Warning: “வீதிகளில் இனி மாடுகள் சுற்றினால் அது எங்கள் சொத்து” – சென்னை மாநகர ஆணையர் உச்சகட்ட எச்சரிக்கை.! 

இந்திய அரசு கனடாவில் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது அபத்தமானது. நாங்கள் ஜனநாயகவாதிகள், சட்டத்தின் ஆட்சிக்கு வலுவான அர்ப்பணிப்பு அரசியலை செய்துவருகிறோம். ஆதாரமற்ற குற்றசாட்டுகளை வைத்து இந்திய அரசின் மீது பழிசொல்வது அபத்தமானது.

இந்தியாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு இடையூறையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்திவரும் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் கவனத்தை திசைதிருப்புகிறார்கள். இவ்விவகாரத்தில் கனடா அரசு செயலாற்ற தன்மையுடன் நீண்டகாலமாக இருப்பது கவலையை அளிக்கிறது.

அங்குள்ள அரசியல் பிரமுகர்களின் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் வெளிப்படையாக கவலையளிக்க வைக்கிறது. கனடாவில் நடக்கும் கொலைகள், மனித கடத்தல் மற்றும் பிற குற்றங்களுக்கு அந்நாட்டு அரசு அடைக்கலம் கொடுப்பது புதிதல்ல எனினும், உங்களின் குற்றசாட்டுகளை நாங்கள் நிராகரிக்கிறோம். இவ்வாறான செயல்களில் என்றும் இந்தியா ஈடுபடாது.

இவ்வாறான விவகாரங்கங்களில் இந்திய அரசை இணைக்கும் முயற்சியை கனடா மேற்கொள்ள வேண்டாம். தங்களது மண்ணில் செயல்பட்டு வரும் இந்தியாவுக்கு எதிரான ஒவ்வொரு சக்திகளையும் விரைவான, பயன்தரும் சட்டங்களின் வழியே கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசு கனடா அரசிடம் கேட்டுக்கொள்கிறது" என தெரிவித்தார்.