செப்டம்பர் 19, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், பின்னணி பாடகர், நடிகர், திரைப்பட ஆசிரியர், பாடலாசிரியர், ஒலிப்பதிவு பொறியாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகத்தை கொண்டவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). 2005ல் சுக்ரன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, 2012ல் நான் திரைப்படம் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமானார்.
அதனைத்தொடர்ந்து, சலீம், பிச்சைக்காரன், அண்ணாதுரை, திமிரு பிடிச்சவன், கோடியில் ஒருவன், பிச்சைக்காரன் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் அடுத்தபடியாக 4 படங்கள் உருவாகி விரைவில் வெளியாகவிருக்கின்றன.
மிகக்குறுகிய காலத்தில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தமிழக மக்களின் மனதை வென்ற நடிகர் விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் திரைப்படம் மூலமாக உச்சத்திற்கு சென்றார். இவரின் மனைவி பாத்திமா. தம்பதிகளுக்கு லாரா @ மீரா (வயது 16) என்ற மகள் இருக்கிறார். Chennai Corporation Warning: "வீதிகளில் இனி மாடுகள் சுற்றினால் அது எங்கள் சொத்து" - சென்னை மாநகர ஆணையர் உச்சகட்ட எச்சரிக்கை.!
லாரா அங்குள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்தார். இவர்கள் அனைவரும் ஆழ்வார்பேட்டை பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் சிறுமி மீரா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை கண்டு அதிர்ந்துபோன குடும்பத்தினர், உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சிறுமியின் இறப்பை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்த சம்பவம் விஜய் ஆண்டனி மற்றும் அவரின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில், தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியின் மரணத்திற்கான காரணம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திரையுலகை சேர்ந்த பலரும் விஜய் ஆண்டனிக்கு இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். தேனாம்பேட்டை காவல் துறையினர் லாராவின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் அதிகாரிகள் தடயங்களை சேகரிக்கின்றனர்.
மாலை 03:00 மணியளவில் சிறுமி மீராவின் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.