H1B Visa Fees: எச்1பி விசா கட்டணம் உயர்வு.. இந்தியர்களுக்கு பேரிடி! டிரம்ப் அதிரடி! முழு விபரம் இதோ.!
அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எச்1பி விசா (H1B Visa Price) கட்டணத்தை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் H1B விசா விலை இந்தியாவில் ரூ.88 லட்சமாக (1 லட்சம் USD) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எச்1பி விசா வரலாறு என்ன? (H1B Visa History) என்பதுடன், உலக செய்திகளை (World News) லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil)ல் படிக்கவும்.
செப்டம்பர் 20, வாஷிங்க்டன் டிசி (World News): வளரும் நாடுகளில் இருக்கும் ஒவ்வொருவரின் கனவாக மேலை நாடுகளுக்கு கல்வி-வேலை, சுற்றுலாவுக்கு சென்று வரவேண்டும் என்பதுதான். அந்த வகையில், பல கோடி இந்தியர்களின் கனவாக அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்காவுக்கு கல்வி, வேலை உட்பட பல்வேறு விஷயங்களுக்காக விசா வழங்கப்படுகிறது. இதில் ஐடி நிறுவனம் உட்பட பல்வேறு வேலைகளுக்கு அமெரிக்க அரசின் சார்பில் எச்1பி விசா (H1B Visa) வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணியாற்ற வரும் நபர்களுக்கு H1B விசா கொடுக்கப்படும். இந்த விசாவுக்கு அமெரிக்க அரசிடம் தொழில் நிறுவனங்கள் வரியும் செலுத்த வேண்டும். இந்த விசா இந்தியர்களுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது. குறிப்பாக ஐடி போன்ற தொழில்நிறுவனங்களில் வேலை பார்த்து வரும் இந்தியர்களை, அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களை விட குறைந்த சம்பளத்துக்கு அழைத்ச்சுச்சென்று வேலை கொடுத்தது. இந்த தொகை நமது மதிப்புக்கு மிகப்பெரியது என்பதால், பலகோடி இந்திய இளம் தலைமுறையின் கனவாகவும் இருந்தது. இந்த விசா கட்டணம் தற்போது கிடுகிடுவென உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு அழுத்தம் தரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (US India Trade War):
அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்துடன் அதிபர் தேர்தலை இரண்டாவது முறையாக எதிர்கொண்ட அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கர்களுக்கும், அமெரிக்காவுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் என தெரிவித்தார். அவர் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து அமெரிக்காவை மீண்டும் வணிக ரீதியாக முன்னேற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதனால் பல நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதிஉதவி, இராணுவ உதவிகள் அதிரடியாக நிறுத்தப்பட்டன. வணிக முறையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. அமெரிக்காவில் உற்பத்தியாகும் பால், வேளாண் பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதி கேட்டு அமெரிக்கா-இந்தியா அரசு இடையே பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் இறைச்சி கலந்த தீவனத்தில் உற்பத்தியாகும் பால், பால் பொருட்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட வேளாண் பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய இந்திய அரசு திட்டவட்டமாக எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி இந்தியா ஈரான், ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்கி தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தி வந்தது. இதனால் இந்தியாவின் மீது அதிருப்தியடைந்த அதிபர் டொனால்ட் டிரம்ப் வரி விதிப்பு நடவடிக்கையை கையில் எடுத்தார். இந்த வரி விதிப்பின்கீழ் அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படுகிறது. இந்த விஷயங்களை சரி செய்ய தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. Indian Techie Shot Dead: இந்திய தொழில்நுட்ப வல்லுநர் சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
எச்1பி விசா கட்டணம் உயர்வு (H1B Visa Fees Hike):
அமெரிக்காவைப்பொறுத்த வரையில் வெளிநாட்டுக்காரர்கள் குறைந்த ஊதியம் உட்பட பல்வேறு பிரச்சனைகளால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பின்மை என்பது கேள்விக்குறியானது. அதே நேரத்தில், H1B விசாவால் பலனடைவதில் இந்தியர்களின் பங்கு மிகப்பெரிய அளவில் இருந்தது. இந்தியா, சீனா நாட்டவர்கள் எச்1பி விசாவை பயன்படுத்தி அதிகளவில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இதனால் இந்த விஷயத்துக்கு முட்டுக்கட்டை போடும் விதமாகவும், இந்தியாவை மறைமுகமாக தனது அழுத்தத்துக்கு கொண்டு வரவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலராக உயர்த்தி அறிவித்துள்ளார். இது தற்போது அமலில் உள்ள தொகையை விட பன்மடங்கு அதிகம் ஆகும். இந்த புதிய உத்தரவின்கீழ், எச்1பி விசாவின் விலை இந்தியாவில் ரூ.88 லட்சமாக (H1B Visa Price In India) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை அமெரிக்காவில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் அமெரிக்க அரசுக்கு வாரியாக செலுத்தும். இந்த வரி செலுத்தியபின் அமெரிக்காவுக்கு ஒரு நிறுவனம் தனது ஐடி ஊழியரை பணிக்கு அழைத்துச் செல்லும். தற்போது இந்த நடைமுறையின் காரணமாக நிறுவனங்கள் தனது சேவையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
H1B விசா கட்டணம் உயர்வு குறித்து அமெரிக்க அரசுத்தரப்பு கருத்து:
விசா கட்டணம் உயர்வு குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகை தலைமை செயலாளர் வில் ஸ்கார்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்கள் அப்போது பேசுகையில், "அமெரிக்காவில் எச்1பி விசா கட்டணம் உயர்த்தப்படுகிறது. அமெரிக்காவில் எச்1பி விசா திட்டத்தின் கீழ் நுழைய முயற்சிப்பவர்களுக்கு இது பொருந்தும். இந்த உத்தரவு உடனடியாக நாளை (செப்டம்பர் 21, 2025) முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அமெரிக்க நிறுவனங்கள் நமது நாட்டில் உள்ள திறன் வாய்ந்த பணியாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எச்1பி விசாவுக்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த 2024ம் ஆண்டு மட்டும் எச்1பி விசா கேட்டு விண்ணப்பித்தவர்களில் 71% இந்தியர்கள் ஆவார்கள். உள்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு, அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது தொடர்பான விஷயத்துக்காக வரி விதிக்கப்படுகிறது" என தெரிவித்தனர். இந்த கட்டண உயர்வு அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என கனவில் இருந்த பலருக்கும் பேரிடியை இறக்கி இருக்கிறது. Amazon Deforestation: அமேசான் காடழிப்பு; சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2,253 பேர் மர்ம மரணம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!
எச்1பி விசா வரலாறு (What is H1B Visa), செயல்படுவது எப்படி? (H1B Visa History and How it Works):
அமெரிக்காவில் தற்காலிக வேலையை வழங்கும் H1B விசா, வெளிநாடுகளை சேர்ந்த சிறப்பு நிபுணர்களை பணியாற்ற அனுமதி வழங்குகிறது. கடந்த 1990ம் ஆண்டு முதல் வெளிநாடு தொழிலாளர்களுக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. வெளிநாட்டில் இளங்கலை பட்டம், அதற்கு மேல் படித்தவர்கள், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணித துறைகளில் திறமையானவர்களை பணிக்கு எடுத்துக்கொள்ள, அவர்களை அமெரிக்காவில் முதற்கட்டமாக 3 ஆண்டுகள் வேலையில் நியமித்துக்கொள்ள எச்1பி விசா உதவுகிறது. கூடுதலாக 6 ஆண்டுகள் வரை விசாவை நீடித்துக்கொள்ளலாம். வேலைக்கு வந்த நபர் இடைப்பட்ட காலத்தில் கிரீன் கார்டு பெற தகுதியாகும் பட்சத்தில், அவரின் விசா நிரந்தர பதிவிடமாக மாற்றம் செய்யப்படும் அல்லது காலவரையின்றி புதுப்பிக்கப்படும். எச்1பி விண்ணப்பங்கள் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகளால் பல்வேறு செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு தேர்வு செய்யப்படுகிறது. இதில் பல கெடுபிடிகளை கூடுதலாக விதிக்கவும் அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விசா அதிகாரப்பூர்வமாக கிடைப்பவர்களுக்கு அமெரிக்கர்களுக்கு இணையான ஊதியம், சலுகைகள் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 65,000 எச்1பி விசா வழங்கும் அமெரிக்க அரசு, முதல் 20,000 விசாக்களை அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்து வழங்குகிறது. எஞ்சியவை விண்ணப்பிப்பவர்களுக்கு கிடைக்கும்.
எச்1பி விசா கட்டணம் உயர்வு (H1B Visa Fees Hike):
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)