Indian Techie Shot Dead (Photo Credit: @thenewsdrill X)

செப்டம்பர் 19, கலிபோர்னியா (World News): அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 30 வயதான இந்திய தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தெலுங்கானாவின் மஹபூப்நகரைச் சேர்ந்த முகமது நிஜாமுதீன் (வயது 30), செப்டம்பர் 3ஆம் தேதி சாண்டா கிளாராவில் உள்ள தனது வீட்டில் கத்தியுடன் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வீட்டிற்குள் நடந்த ஒரு கத்திக்குத்து சம்பவம் குறித்து 911 என்ற எண்ணுக்கு வந்த அழைப்பிற்கு பதிலளித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். Amazon Deforestation: அமேசான் காடழிப்பு; சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2,253 பேர் மர்ம மரணம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

மாணவர் சுட்டுக்கொலை:

இதுகுறித்த விசாரணையில், நிஜாமுதீனுக்கும் அவரது அறை தோழருக்கும் இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் வாக்குவாதம் தீவிரமடைந்து, தாக்குதலுக்கு வழிவகுத்திருக்கலாம் என காவல்துறையினர் கூறுகின்றனர். அவரது வீட்டிற்கு வந்த காவல்துறையினர் அவர் மீது துப்பாக்கிச் சூட்டில் (Shot Dead) ஈடுபட்டனர். உடனே, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இருப்பினும், நிஜாமுதீனின் குடும்பத்தினர், துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன்பு காவல்துறையினரை உதவிக்கு அழைத்தது நிஜாமுதீன் தன் என்று கூறினர்.

போலீஸ் விசாரணை:

நிஜாமுதீன் புளோரிடா கல்லூரியில், கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்று கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் உள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் அமைதியான மற்றும் மத நம்பிக்கை கொண்டவர். மேலும் இனரீதியான துன்புறுத்தல், ஊதிய மோசடி மற்றும் வேலையில் இருந்து தவறான முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டதாக பகிரங்கமாக புகார் அளித்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்த வேண்டுமென்று, குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.