Vivek Ramaswamy Drops Presidential Race: அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் விவேக் ராமசாமி விலகல்: டொனால்ட் டிரம்புக்கு வரவேற்பு அதிகரிப்பால் பின்னடைவு.!

அமெரிக்காவின் அதிபராக நினைத்த இந்திய வம்சாவளி தொழிலதிபருக்கு முதல் ஏமாற்றம் கிடைத்து, அவர் அதிபர் தேர்தலில் இருந்து விலகி இருக்கிறார்.

Vivek Ramasamy (Photo Credit: @NewsTapWorld X)

ஜனவரி 16, வாஷிங்க்டன் டிசி (World News): அமெரிக்காவில் நவம்பர் 05, 2024 அன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். 528 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில், பெரும்பான்மைக்கு 270 தொகுதிகளில் வெற்றிபெறும் கட்சி அங்கு ஆட்சியை அமைக்கும். Iran President Meets India's EAM: ஈரான் அதிபர் - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு; சபாஹர் துறைமுக விரிவாக்கத்தில் இந்தியா ஒப்பந்தம்.! 

விவேக் ராமசாமி தோல்வி: எதிர்வரும் 2024 பாராளுமன்ற தேர்தலை பொறுத்தமட்டில், குடியரசுக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி உட்பட பலரும் விருப்பம் தெரிவித்து இருந்தனர். இதற்கான பிரதிநிதிகள் தங்களின் வாக்குகளை பதிவு செய்த நிலையில், விவேக் ராமசாமிக்கு 2 மாகாண பிரதிநிதிகள் என 3,805 பேர் மட்டுமே தங்களின் வாக்கை பதிவு செய்தனர். 19 மாகாண பிரதிநிதிகளின் ஆதரவை பெற்ற டொனால்ட் ட்ரம்ப் 25,813 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். இதனால் விவேக் ராமசாமி அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகிக்கொண்டார்.

குடியரசுக்கட்சியை சேர்ந்த 7.7 வாக்குகளே ராமசாமிக்கு பதிவானது. அவர் இந்த தேர்தலில் வெற்றியடைவதற்காக கடந்த சில மாதங்களாகவே தீவிர அரசியலில் களமிறங்கி 300 க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் பிரச்சார பணிகளை மேற்கொண்டு இருந்தார். எக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்கும் ராமசாமியின் முயற்சியை பாராட்டி பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.