Gaza Hospital Attack: காசாவில் மருத்துவமனை மீது தாக்குதல்; கைவிரிக்கும் இஸ்ரேல்., குற்றச்சாட்டை முன்வைக்கும் பாலஸ்தீனிய அதிகாரிகள்.!

மத்திய காசா நகரில் இருக்கும் அல் அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனையில் திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அங்கு 500 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Gaza Hospital Attack Visuals (Photo Credit: Twitter)

அக்டோபர் 17, ஜெருசலேம் (World News): கடந்த அக்டோபர் 07ம் தேதி இஸ்ரேல் (Israel) நாட்டை எதிர்த்து பாலஸ்தீனியத்தை (Palestine) சார்ந்த ஹமாஸ் (Hamas Group) பயங்கரவாதிகள் காலை திடீர் போர்த் தாக்குதலை முன்னெடுத்தனர். இந்த எதிர்பாராத தாக்குதலை இஸ்ரேல் முதலில் எதிர்கொண்டு உயிர்பலியை சந்தித்தாலும், பின் தனது ராணுவத்தை முழு வீச்சில் களமிறக்கி பதில் தாக்குதல் மேற்கொண்டது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் எல்லைப்புற இஸ்ரேல் நகரங்களுக்கும் புகுந்து கொடூர கொலைகளை செய்தனர். பாலஸ்தீனத்தின் காசா நகர் குண்டு மழைகளால் தரைமட்டமாக்கப்பட்டது. தற்போது ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் பொருட்டு இஸ்ரேல் இராணுவம் செயலாற்றி வருகிறது.

பாலஸ்தீனியத்திற்குள் இஸ்ரேல் படையினர் அதிரடியாக தரைவழி ஆய்வுகள் மற்றும் தாக்குதல்களை முன்னெடுத்து இருக்கின்றனர். இந்த நிலையில், பாலஸ்தீனியத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் ஏவுகணை (Missile Attack) தாக்குதல் நடப்பட்டுள்ளது. Leo FDFS Show Time: லியோ திரைப்படத்திற்கு காலை 9 மணி காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி - உள்துறை செயலாளர் அறிவிப்பு.. சோகத்தில் விஜய் ரசிகர்கள்.! 

IDF Spokesperson RAdm. Daniel Hagari (Photo Credit: Twitter)

மத்திய காசா நகரில் இருக்கும் அல் அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனையில் திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அங்கு 500 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணம் என அங்குள்ள அதிகாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இதனை முற்றிலுமாக மறுத்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu), "எங்களது உளவுத்துறை தகவலின் படி இந்த தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை. இஸ்லாமிய ஜிகாத் அமைப்பினர் ஏவுகணை தாக்குதலில் தோல்வியுற்றதே அங்கு நடந்த தாக்குதலுக்கான முக்கிய காரணம்.

மருத்துவமனையின் மீது இஸ்ரேல் எக்காரணம் கொண்டும் தாக்குதல் நடத்தவில்லை. பயங்கரவாதிகளே இதற்கு முழு பொறுப்பு. இஸ்ரேலிய படைகள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த முயற்சிக்கும்போது, அவர்களின் தவறுகள் காரணமாக மருத்துவமனை மீது அவர்களின் ஏவுகணை பாய்ந்தது" என தெரிவித்துள்ளார். Kundara Johny: பிரபல மலையாள வில்லன் நடிகர் குந்தரா ஜானி மாரடைப்பால் காலமானார்; சோகத்தில் திரையுலகினர்.! 

மருத்துவமனையின் மீது நடந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல் தெரிய வந்துள்ளன. மீட்பு பணிகள் அங்கு நடைபெற்ற வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் இஸ்ரேலுக்கு செல்ல பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், தற்போது மருத்துவமனை மீது தாக்குதல் நடந்த விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.