அக்டோபர் 18, திருவனந்தபுரம் (Cinema News): மலையாளத்தில் வில்லன் (Antagonist Roles) கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர் குந்தாரா ஜானி (Kundara Johny).
நேற்று கொல்லத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த ஜானிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்படவே, உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார்.
தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உடனடியாக ஜானிக்கு உரிய சிகிச்சை மேற்கொண்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவல் தற்போது வெளியுலகுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அறிந்த மலையாளத் திரையுலகினர் சோகத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். பலரும் அவரின் இல்லத்திற்கு அஞ்சலி செலுத்த விரைந்துள்ளனர். National Film Awards Best Actor: சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை தட்டிச்சென்றார் நடிகர் அல்லு அர்ஜுன்; புஷ்பா னா பயர் தான்.!
கடந்த 1979ல் இருந்து திரைத்துறையில் பணியாற்றி வரும் ஜானி, அக்னிபர்வதம், நித்ய வசந்தம், ராஜாவின்டே மகன், அவநாழி ஆகிய படங்களில் நடித்து பெரும்புகழ் பெற்றார்.
மறைந்த நடிகர் நம்பியாரின் 'நாடோடிக்கட்டு' திரைப்படத்தில் நம்பியார் வேடத்திலும் இவர் நடித்திருந்தார். பல விருதுகளையும் தனது வாழ்நாளில் வென்றுள்ளார்.
71 வயதாகும் நடிகர் குந்தாரா ஜானியின் மறைவு மலையாள திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரின் ரசிகர்களும் தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்துகின்றனர்.