அக்டோபர் 18, சென்னை (Cinema News): மாநகரம், கைதி மற்றும் மாஸ்டர், விக்ரம் படங்களை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில், இளையதளபதி (Thalapathy Vijay) விஜயின் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் லியோ (Leo).
இப்படம் அக்.19ம் தேதியான நாளை உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. அமெரிக்கா, மலேஷியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் தமிழ் மொழியில் வெளியாகிறது.
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் (Seven Screen Studios) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில், நடிகர்கள் விஜய், திரிஷா (Trisha), சஞ்சய் தத் (Sanjay Dutt), மன்சூர் அலிகான் (Mansoor AliKhan), சாண்டி மாஸ்டர், கெளதம் வாசுதேவ் மேனன் (Gowtham Menon) உட்பட பலரும் நடித்துள்ளனர்.
விஜய் ரசிகர்களால் (Vijay Fans) பெருமளவு எதிர்பார்க்கப்படும் லியோ திரைப்படம், லோகேஷ் கனகராஜின் (Lokesh Cinematic Universe UCU) அட்டகாசமான ஆக்சன்-திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி குறித்த பல சர்ச்சை தமிழ்நாட்டில் எழுந்தது. Rolls Royce Layoff: 2,500 பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்கிறது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்.! அதிர்ச்சியில் ஊழியர்கள்.!
நேற்று படத்தயாரிப்பு குழுவின் சார்பில் காலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு முன்னதாகவே நாளை முதல் அக்.25 வரையில் காலை 9 மணிமுதல் நள்ளிரவு 01:30 மணிக்குள் 5 காட்சிகளை திரையிட்டுக்கொள்ள அனுமதி வழங்கி இருந்தது.
படக்குழுவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், காலை 07:00 மணிக்கு காட்சிகளை திரையிட அனுமதிகெட்டு, தயாரிப்புக்குழு நேற்று தலைமை செயலாளரை நேரில் சந்தித்து வந்தது.
இந்நிலையில், லியோ திரைப்படத்திற்கு காலை 07:00 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்க இயலாது. அக்.19ம் தேதி முதல் அக்.25ம் தேதி வரையில் காலை 09:00 மணிக்கே காட்சிகளை திரையிட வேண்டும். மீறினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா தெரிவித்துள்ளார்.