Israelis Banned From Entering Maldives: இஸ்ரேலியர்கள் மாலத்தீவில் நுழைய தடை; அதிபர் முகமது முயிசு அதிரடி அறிவிப்பு..!
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், மாலத்தீவு அரசாங்கம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஜூன் 03, மாலே (World News): மாலத்தீவிற்கு உலகில் உள்ள எல்லா நாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்வர். தற்போது, காசா மீது இஸ்ரேல் தாக்குதல் (Gaza War) நடத்தி வரும் நிலையில், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாலத்தீவில் மக்கள் அனைவரும் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், அந்நாட்டு அரசாங்கம் இஸ்ரேலியர்களை தங்களது நாட்டிற்கு வர தடை விதித்துள்ளனர். Oppo F27 Series Design Leaked: ஓப்போ F27 சீரிஸ் ஸ்மார்ட் போன் வடிவமைப்பு இணையத்தில் கசிவு..!
இஸ்ரேலுக்கு எதிராக சரியான முடிவை அறிவிக்க வேண்டும் என்று, மாலத்தீவில் உள்ள எதிர்க்கட்சிகளும் மற்றும் கூட்டணிக் கட்சிகளும் மாலத்தீவு அதிபர் முகமது முயிசுவுக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், உள்துறை மந்திரி அலி இஹூசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 'இஸ்ரேலிய பாஸ்போர்ட் பயன்படுத்தி மாலத்தீவிற்கு வருபவர்களை தடுக்க கூடிய விரைவில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது' என அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து, இஸ்ரேல் தங்கள் நாட்டு மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மாலத்தீவில் இஸ்ரேலிய குடிமக்கள் இருந்தால், உடனடியாக அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.