Oppo F27 Series (Photo Credit: @stufflistings X)

ஜூன் 03, சென்னை (Technology News): ஓப்போ நிறுவனம் அதன் ஓப்போ F27 சீரிஸை (OPPO F27 Series) வெளியிடப்படும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவே இணையத்தில் கசிந்துள்ளது. மேலும், இது இந்தியாவில் வெளியிடப்படலாம். இதில் ஓப்போ F27, ஓப்போ F27 ப்ரோ மற்றும் ஓப்போ F27 ப்ரோ பிளஸ் ஆகிய மூன்று மாடல்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவில் வருகின்ற ஜூன் 13-ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்படும் என்று முகுல் ஷர்மா பகிர்ந்துள்ளார். Sapota Helps In Weight Loss: உடல் எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா பழம்..!

ஓப்போ F27 சீரிஸ் (கசிவு): இது இரண்டு வண்ணங்களில் ஓப்போ F27 ப்ரோ+ 5G உடன் அதிகாரப்பூர்வ டீஸர் படத்தைப் போல் தெரிகிறது மற்றும் வெளியீட்டு தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. நீலம் மற்றும் பிங்க் என இரண்டு வண்ணங்களில் காணப்படுகிறது. ப்ரோ மாடல்கள் லெதர்-பேக் டிசைனில் வரக்கூடும். இந்த பதிவில் போன் தண்ணீரில் மூழ்கியிருப்பதையும் காட்டுகிறது. இது ஐபி மதிப்பீட்டை முன்னிலைப்படுத்தும் என்றும், F27 Pro இந்தியாவில் முதல் IP69-மதிப்பிடப்பட்ட ஸ்மார்ட் போனாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஓப்போ நிறுவனம் அதன் F27 சீரிஸ் மற்றும் அதன் அம்சங்களைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட பிறகே முழு விவரங்கள் தெரியவரும். போனின் வடிவமைப்பு கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட OPPO A3 Pro போலவே இருக்கின்றது. அதே ஃபோன் IP69 மதிப்பீட்டில் வெளியிடப்பட்டது. இது அதன் ரீ-பிராண்டட் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. புதிய OPPO F27 சீரிஸ் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்தியாவில் அறிமுகமான F25 ப்ரோவை அடுத்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.