Laughing Is Mandatory In Japan: 'ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கட்டாயம் சிரிக்க வேண்டும்' - ஜப்பான் அரசு அதிரடி உத்தரவு..!
ஜப்பானில் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கட்டாயம் சிரிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ஜூலை 12, டோக்கியோ (World News): ஜப்பான் யமகட்டா மருத்துவ பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிவியல் அறிக்கையில், தினமும் சிரிப்பதால் மாரடைப்பு (Heart Attack) உள்ளிட்ட பல்வேறு நோய்களின் தாக்கம் வெகுவாக குறைந்தது தெரியவந்தது. அதனை அடிப்படையாக வைத்து, கட்டாயம் ஒரு நாளைக்கு ஒரு முறை சிரிக்க (Laughter) வேண்டும் என ஜப்பானில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. Interim Bail For Delhi CM: டெல்லி முதலமைச்சருக்கு இடைக்கால ஜாமீன்; உச்ச நீதிமன்றம் உத்தரவு..!
யமகட்டா மாகாணத்தில் வாழும் மக்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஒரு முறை கட்டாயம் சிரிக்க வேண்டும். மேலும், மாதத்தின் எட்டாவது நாளில் சிரிப்பை ஊக்குவிக்கும் வகையில் சிரிப்பு தினம் கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சிரிப்பது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்றும் இது அடிப்படை உரிமை மீறல் என்றும், அதனை சட்டத்தால் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் ஒருசாரர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.