![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/1720766215Delhi%2520CM%2520Arvind%2520Kejriwal%2520Supreme%2520Court%2520File%2520Pic-380x214.jpg)
ஜூலை 12, டெல்லி (Delhi News): டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் (Delhi CM Arvind Kejriwal) கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி அன்று, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது அமலாக்கத்துறையினரால் செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக இடைக்கால ஜாமீன் (Interim Bail) வழங்கப்பட்டது. ஜாமீன் காலம் முடிவடைந்து கடந்த மாதம் 02-ஆம் தேதி மீண்டும் திகார் சிறையில் கெஜ்ரிவால் ஆஜரானார். SS Vs NRK Highlights: நெல்லை ராயல் கிங்ஸ் அசத்தல் வெற்றி; சோனு யாதவ் அபார பந்துவீச்சு..!
கடந்த மாதம் 26-ஆம் தேதி சிபிஐ (CBI) கைது செய்து அவரை விசாரித்து வந்தனர். இந்நிலையில், தன்னை கைது செய்ததை எதிர்த்தும், நீதிமன்ற காவலில் வைத்திருப்பதை எதிர்த்தும், உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று அதற்கான தீர்ப்பு அளிக்கப்பட்டது. அமலாக்கத்துறை மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இரு தரப்புகளின் வாதங்களை விசாரணை செய்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா அடங்கிய அமர்வு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அதில், 90 நாட்களுக்கும் மேலாக முதலமைச்சர் ஒருவர் சிறையில் இருப்பதை அடிப்படையாக கொண்டும், மேலும் அவரது உடல் நலத்தை கருத்தில் கொண்டும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை கைது நடவடிக்கையில் தற்போது ஜாமீன் பெற்றிருந்தாலும், சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் சிறையில் இருந்து வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.