Jill Biden tested positive for COVID 19: இந்தியாவில் நடக்கப் போகும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வாரா ஜோ பைடன்?: கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிக்கல்..!
இதில் கலந்து கொள்ள இருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தற்போது தனது மனைவி ஜில் பைடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால் மாநாட்டில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
செப்டம்பர் 5, வாஷிங்டன் (World News): ஜி-20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீனாவின் அதிபர் ஜின்பிங் உட்பட பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் தேசங்களின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. தற்போது ஜி-20 (G-20 Summit) அமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ள காரணத்தால், இந்த வருடத்திற்கான உச்சி மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் டெல்லியில் (New Delhi ) நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் செப்டம்பர் 7 ஆம் தேதி ஜோ பைடன் (Joe Biden) ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவிற்கு புறப்பட இருக்கிறார். அவரது மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணியும் ஆன ஜில் பைடனுக்கு (Jill Biden) கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. Keerthi Suresh: நம்ம கீர்த்தி சுரேஷா இது?.. ஆளே அடையாளம் தெரியாம, டக்கரா இருகாங்க பாருங்களேன்..!
மேலும் அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
72 வயதாகி இருக்கும் ஜில் பைடன் கொரோனா தொற்று உறுதியாகி ரெஹோபோத் கடற்கரையில் இருக்கும் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். கடந்த வருடமும் ஆகஸ்ட் மாதம் ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிப்பிலிருந்து அவர் மீண்டு வந்தார். இந்த நிலையில் அதிபர் ஜோ பைடன் இந்தியாவில் நடக்க போகும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.