செப்டம்பர் 05, மும்பை (Cinema News): தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான பல திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthi Suresh). இவர் கடந்த 2013ம் ஆண்டு வெளியான கீதாஞ்சலி திரைப்படத்தில் நடித்து, சைமா திரைப்பட விருதுகளையும் பெற்றார்.

முதல் படத்திலேயே அவருக்கு கிடைத்த அங்கீகாரம், தொடர்ந்து அவரை உச்சத்தை நோக்கி பயணிக்க வைத்தது. அதனைத்தொடர்ந்து, 2015ல் வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தின் வாயிலாக தமிழுக்கும் அறிமுகமானார். Virat Kohli Autograph: நேபாள வேகப்பந்து வீச்சாளரின் ஷூவில் ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்த விராட் கோலி..!

மலையாள திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சுரேஷ் குமாருக்கும் - தமிழ் நடிகை மேனகாவுக்கும் இடையே மலர்ந்த காதல், அதனைதொடர்ந்த திருமண பந்தத்தின் மூலமாகவே கீர்த்தி சுரேஷ் தமிழ்-மலையாள திரையுலகுக்கு கிடைத்தார்.

ரஜினி முருகன், தொடரை, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, பென்குயின், மாமன்னன் உட்பட பல படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளார். தமிழில் சைரன், கண்ணிவெடி, ரகுதாதா திரைப்படங்கள் அடுத்தடுத்து இவரின் நடிப்பில் வெளியாகவுள்ளன. இந்நிலையில், இவரின் சமீபத்திய தோற்றம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)