Kamala Harris Speech: "நான் ஒரு நடுத்தர குடும்பப் பின்னணியில் இருந்து வருகிறேன்" - தேசிய மாநாட்டில் கமலா ஹாரிஸ்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடும் நிலையில், இன்று அவர் தனது நாமினேஷனை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

Kamala Harris (Photo Credit: @WatcherGuru X)

ஆகஸ்ட் 23, சான் ஜோஸ் (World News): அமெரிக்காவில் நவம்பர் 2024-ல் நடைபெறவுள்ள தேர்தலில் புதிய அதிபரை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். இன்னும் சில மாதங்களே இருப்பதால் அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முதலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட ஜோ பைடன், பின் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் (Kamala Harris) ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். மறுபக்கம் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) போட்டியிடுகிறார்.

தேசிய மாநாடு: கமலாவை அதிகாரப்பூர்வமாக நாமினேட் செய்ய சிகாகோவில் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு நடக்கிறது. இதில் அதிபர் பைடன், முன்னாள் அதிபர்கள் ஒபாமா, பில் கிளிண்டன் என பலரும் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் கமலா பேசியதாவது, "கட்சி, இனம், பாலினம், மொழி ஆகியவற்றை தாண்டி ஒவ்வொரு அமெரிக்கர் சார்பாகவும், உலகின் தலை சிறந்த தேசத்தில் வாழும் மக்கள் சார்பாக நான் இந்த நாமினேஷனை ஏற்றுக்கொள்கிறேன். தான் அமெரிக்காவின் எதிர்காலத்திற்காகப் போராட உள்ளதாகவும் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லும் அதிபராக இருப்பேன். Richest Village In Asia: 'ஆசியாவின் பணக்கார கிராமம்' - இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா..?

நான் ஒரு நடுத்தர குடும்பப் பின்னணியில் இருந்து வருகிறேன். எனது அம்மா ஷியாமளா கோபாலன் தைரியமான ஒரு ஆள். அவரை போல ஒருவரைப் பார்க்கவே முடியாது. எங்களை வளர்த்தெடுக்க அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும் என்னுடைய அம்மா இவ்வளவுதான் செலவழிக்க வேண்டும் என்ற பட்ஜெட்டை நிர்ணயம் செய்திருப்பார். அதில்தான் நாங்கள் எங்கள் வாழ்க்கையை வாழ்ந்தோம். எனது தந்தை டொனால்ட் ஜாஸ்பர் ஹாரிஸ் எப்போதும் அச்சமின்றி இருக்கக் கற்றுக் கொடுத்தார்" என்றார்.