Microsoft Report: மைக்ரோசாப்ட் மூத்த அதிகாரிகளின் இ-மெயில் கணக்குகள் முடக்கம்: ரஷிய ஹேக்கர்கள் மீது மைக்ரோசாப்ட் குற்றசாட்டு.!

பிராந்திய பாதுகாப்பு என ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து சென்றது, அமெரிக்காவின் பனிப்போரை வெளிப்படையாக நிறைவேற்ற உறுதுணையாக இருந்தது.

Microsoft (Photo Credit: Pixabay)

ஜனவரி 20, மாஸ்கோ (Moscow): ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்துச் சென்று இரண்டு ஆண்டுகளை கடந்தும் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ரஷ்யா போரை நிறுத்த வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்தியும், பிராந்திய பாதுகாப்பு என்ற விஷயத்தை மேற்கோள் காட்டி தனது செயல்பாடுகளை தொடருகிறது.

இதனால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு உலகளாவிய நடவடிக்கைகளை எடுத்து, பொருளாதார தடைகள் விதித்தன. இதனை கண்டுகொள்ளாத ரஷ்யா தொடர்ந்து உக்ரைனை கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இதனிடையே, அவ்வப்போது தொழில்நுட்ப ரீதியாக அரசு நிர்வாகம் மற்றும் மக்களின் பயன்பாடுகளை கேள்விக்குறியாக்கும் பொருட்டு சைபர் கிரைம் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் ரஷ்யாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. No Network in Pakistan: மீண்டும் பாகிஸ்தானில் நெட்ஒர்க் சேவை தேசிய அளவில் பாதிப்பு; விலகாத மர்மமாக தொடரும் பிரச்சனை.! 

இந்நிலையில், அமெரிக்காவைச் சார்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், ரஷ்ய ஹேக்கர்கள் குழு தங்களது நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளில் ஈமெயில் கணக்குகளை ஹேக் செய்து இருப்பதாகவும், உடனடியாக அந்த பிரச்சனையை சரி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.