ஆகஸ்ட் 22, தென் அமெரிக்கா (World News): தென் அமெரிக்காவில் உள்ள டிரேக் பாஸேஜ் பகுதியில் இன்று அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென் அமெரிக்கா - அண்டார்டிகா இடையேயான இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் 8.0 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பின் 7.5 ரிக்டர் என்ற அளவிலும் ஏற்பட்டுள்ளது. டிரேக் பாஸேஜ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சிலி கடற்கரையில் சுனாமி அலைகள் எழலாம் என எச்சரிகையும் விடுக்கப்பட்டுள்ளது. Road Accident: பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்து நாசம்.. 71 பேர் உடல் கருகி பலி..!
அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம் :
மேலும் நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மாக்கள் பலரும் வீதியில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் தற்போது வரை எந்தவிதமான உயிர்சேதம் ஏற்பட்டதாகவும், பொருட்சேதம் ஏற்பட்டதாகவும் எந்தவித தகவலும் கிடைக்கப்பெறவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ரஷ்யாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு பசுபிக் பெருங்கடலில் உள்ள 11 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரஷ்யாவின் ஒரு சில கடற்கரையோர நகரங்களை சுனாமி அலைகள் தாக்கியும் இருந்தன. இதனிடையே தற்போது அமெரிக்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.