ஆகஸ்ட் 14, வாசிங்டன் (World News): அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தொடக்கத்தில், அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தினார். இதனைத்தொடர்ந்து, பல்வேறு நாடுகள் மீது வரி விதிப்பை அதிகப்படுத்தினார். அந்தவகையில், இந்தியா மீது முதற்கட்டமாக 25% வரி விதித்தார். இதன்மூலம், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கடுமையாக வரி விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார். இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்.. அயர்லாந்து அதிபர் கண்டனம்..!
அமெரிக்கா எச்சரிக்கை:
இந்நிலையில், இந்தியா மீது மேலும் 25% வரி விதித்து, மொத்தமாக 50% வரி விதித்தார். இதனிடையே, ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் நாளை (ஆகஸ்ட் 15) சந்திக்கவுள்ளனர். இதுகுறித்து, அமெரிக்க நிதி செயலாளர் ஸ்காட் பெசன்ட் தெரிவிக்கையில், உக்ரைன் போர் குறித்து ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா மீது வரி விதிப்பு அதிகரிக்கக்கூடும் என கடுமையாக எச்சரித்துள்ளார்.