Balochistan Bomb Blast: அடுத்தடுத்து 2 தற்கொலைப்படை தாக்குதல்; குண்டு வெடித்து 52 பேர் பரிதாப பலி., 50 பேர் படுகாயம்.!
இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து 52 பேர் உடல் சிதறி, கை-கால்களை இழந்து பலியானதால் பலுசிஸ்தான் நகரம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
செப்டம்பர் 29, பாகிஸ்தான் (World News): பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், மஸ்டங் (Mastung, Balochistan) பகுதியில் செயல்பட்டு வரும் மசூதியில் இன்று திரளான இஸ்லாமிய பெருமக்கள் வழிபாடு செய்துகொண்டு இருந்தார்.
அப்போது, அங்கு பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் அங்கிருந்த பொதுமக்கள் பலரும் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். பலரும் உயிருக்காக அலறித்துடித்தனர். TCS Ends Work From Home: மீண்டும் அலுவலகத்தில் வேலை - டிசிஎஸ் பணியாளர்கள் உடனே வர அழைப்பு..!
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பாதுகாப்பு மற்றும் மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த சோக நிகழ்வில் 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50 பேர் மருத்துவமனைகளில் உயிருக்கு போராடி வருகின்றனர்.
மிலாடி நபி பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், வெள்ளிக்கிழமை அன்று நடந்த தொழுகை வழிபாட்டின்போது குண்டு வெடிப்பு சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.