Taliban Russia's 'Allies': தாலிபானுடன் கைகோர்க்கும் ரஷ்யா.. பயங்கரவாதத்தை ஒழிக்க எடுத்த நடவடிக்கை..!
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்காக தாலிபானுடன் ரஷ்யா கைகோர்க்கும் என்று விளாடிமிர் புதின் கூறியுள்ளார்.
ஜூலை 05, மாஸ்கோ (World News): கடந்த சில மாதங்களாகவே ரஷ்யாவில் பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. இந்த பயங்கரவாத தாக்குதல் கலப்பு ஐஎஸ் தீவிரவாதிகள் தான் காரணம் என்று பல தரப்பினர் தகவல் தெரிவித்து வருகின்றனர். இந்த பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் அரசன் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளது. அதற்காக ரஷ்யாவானது தாலிபான் மேல் இருக்கும் தடையை நீக்கியுள்ளது. இதன் மூலம் தாலிபான் அரசிற்கு உதவி செய்து ரஷ்யவானது ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளது. இது குறித்து பேசிய ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் கூட்டின் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதற்காக தாலிபானுடன் ரஷ்யா கைகோர்க்கும் என்று கூறியுள்ளார்.
தாலிபானுடன் கைகோர்க்கும் ரஷ்யா: தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தாலிபனை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தாலிபனை ரஷ்ய அரசு நீக்கியது. இது உலக அரசியல் பிரமுகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டில் தான் தாலிபனை தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளில் பட்டியலில் ரஷ்யா சேர்த்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் கஜகஸ்தான் இப்பட்டியலில் இருந்து தாலிபனை நீக்கி இருந்தது. இந்நிலையில் தற்போது ரஷ்யாவும் நீக்கியுள்ளது. Actress Athulya Ravi's House Robbed: நடிகை அதுல்யா வீட்டில் திருட்டு.. கைதான 2 பணிப்பெண்கள்..!
1980களில் சுமார் பத்து ஆண்டு காலம் வரை ஆப்கானிஸ்தானில் ரஷ்யா போரிட்டது. அதேபோல தாலிபானுக்கு ஆயுதங்களை வழங்குவது ரஷ்யா தான் என ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த 2018 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது. ஆனால் அப்போது அதனை ரஷ்யா மறுத்தது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் 2021 ஆம் ஆண்டு வெளியேறின. அதனைத் தொடர்ந்து தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.