ஜூலை 05, கோவை (Cinema News): திரைப்பட நடிகையான அதுல்யா ரவி (Athulya Ravi) கோவையை சேர்ந்தவர். இவர் வடவள்ளி அருகே தனது தாய் விஜயலட்சுமியுடன் வசித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் அதுல்யாவின் வீட்டில் இருந்து பாஸ்போர்ட், 2000 ரூபாய் பணம் திருடு போய் இருக்கிறது. இதையடுத்து விஜயலட்சுமி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். Assam Flood: வரலாறு காணாத கனமழையால் மூழ்கிய அசாம்.. தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை..!
இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதுல்யாரவி வீட்டில் வேலை பார்க்கும் தொண்டாமுத்தூர் அடுத்த குளத்துபாளையத்தை சேர்ந்த செல்வி (46) என்பவர் மீது காவல் துறையினர்க்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், செல்வி தனது தோழி சுபாஷினி (40) உடன் சேர்ந்து திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.