Floating Nuclear Power Plant: மிதக்கும் அணுமின் நிலைய தொழில்நுட்பத்தை நட்பு நாடுகளுக்கு வழங்க தயாராகும் ரஷியா.!
அவற்றின் செயல்திறன், தேவையை பூர்த்தி செய்யும் திறனே அதன் மதிப்பை கூட்டுகிறது.
மே 27, பெவெக் (Pevek, Russia): ரஷியா உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து சென்றதால், மேலை நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே ரஷியாவுடன் பனிப்போர் செய்துகொண்டு இருந்த அமெரிக்கா உட்பட மேலை நாடுகள், வெளிப்படையாக ரஷியாவை முடக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனால், ரஷியா தனது தரப்பு நட்பு நாடுகளின் உதவியுடன் தொடர்ந்து சர்வதேச அளவில் தன்னை நிலைநாட்டி வருகிறது.
நட்பு நாடுகளுக்கு மானிய விலையில் கச்சா எண்ணெய் வழங்குதலில் இருந்து பல முயற்சிகள் மேற்கொண்டு தனது பொருளாதாரத்தை நிலைக்க வைத்துள்ளது. இந்த நிலையில், ரஷியா மேலும் ஒரு உதவியாக தனது நட்பு நாடுகளுக்கு மிதக்கும் அணுமின் நிலைய தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்ள அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரஷியா அரசுக்கு சொந்தமான அணுசக்தி நிறுவனம் Rosatom, தனது மிதக்கும் அணுசக்தி தொழில்நுட்பத்தை நட்பு நாடுகளுக்கு (Floating Nuclear Power Plant (FNPP) வழங்க முன்வந்துள்ளது என அறிவித்துள்ளது. இதன் மூலமாக மின்சாரம் தேவைப்படும் இடங்களுக்கு மின் விநியோகம் தங்கு தடையின்றி வழங்க இயலும். சிறிய அளவிலான நகரத்திற்கு தேவைப்படும் மின்சாரத்தை இதன் மூலமாக தங்கு தடையின்றி வழங்க முடியும். MI Vs GT: பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் வெளுத்துக்கட்டும் குஜராத் டைட்டன்ஸ்; தாங்குமா? சென்னை சிங்கங்கள்..!
உலகளவில் அதிகளவு உயர்நிலை குளிர்பகுதிகளை கொண்டுள்ள ரஷியாவில், Rosatom நிறுவனத்தின் மிதக்கும் அணுசக்தி கொண்டு பல நகரங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனை வடிவமைத்த 'Akademik Lomonosov' என்ற ரஷிய விஞ்ஞானியின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ரஷியாவின் ப்ரெவிக், வடக்கு நகரங்கள், ஆர்டிக் பகுதிகளில் கோடை காலத்திலும் -24 டிகிரி செல்ஸியஸ் மட்டுமே இருக்கும்.
இந்த மிதக்கும் அணுசக்தி மின் நிலையம் மூலமாக மின்சாரம் மட்டுமின்றி, வெப்பமும் வழங்கப்படுகிறது. அங்குள்ள பள்ளிகள், திரையரங்கு, உணவகம், தங்கும் விடுதிகள், அரசு அலுவலகங்கள், வீடுகளுக்கு தேவையான மின்சாரம் இவை மூலமாக வழங்கப்படுகிறது. -24 டிகிரி செல்ஸியஸ் மற்றும் அதற்கு குறைவான குளிர்நிலை சென்றாலும், அணுசக்தி மின் நிலையத்தின் வேலை தொடர்ந்து நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையமும் ரஷியாவின் Rosatom நிறுவனத்தின் உதவியோடு இந்தியாவில் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷியா-இந்தியாவின் நட்புறவின் பேரில் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டது.