Israel Attacks Iran (Photo Credit : @AssalRad X)

ஜூன் 13, ஜெருசலேம் (World News Tamil): மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் காரணமாக போர் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனியம் (Israel - Palestine War) போருக்கு பின்னர் பாலஸ்தீனியத்துக்கு ஆதரவாக ஈரான் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அந்த நாடுகளின் மீதும் இஸ்ரேல் நேரடி தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் ஈரானில் உள்ள தலைநகர் டெக்ரான் உட்பட எட்டு முக்கிய நகரங்களில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி இருக்கிறது. Air India Flight AI171: ஏர் இந்திய விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன? குஜராத்தில் சோகம்.! 

இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் (Israel Attacks Iran):

பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்த ஈரான், பாலஸ்தீனிய போருக்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஈரான் அணு ஆயுதம் தயாரித்து வருவதாகவும் பல குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் இருக்கின்றன. இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஈரானுக்கு உச்சகட்ட எச்சரிக்கை விடும் விதமாக இஸ்ரேல் ராணுவம் சார்பில் இன்று திடீர் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் :

ஈரானில் உள்ள முக்கிய தலைநகரங்கள், அங்குள்ள அணுசக்தி (Iran Nuclear) மையங்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஈரானில் உள்ள முக்கிய நகரங்களின் கட்டிடங்கள் தீப்பற்றி எரிந்து வருகிறது. போர் பதற்ற சூழலால் இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்குமாறும், அங்கிருந்து வெளியேறுவது மற்றும் பிற விஷயங்கள் தொடர்பாக தூதரகத்துடன் இணைந்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஈரானின் முப்படை தளபதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தீப்பற்றி எரியும் கட்டிடங்கள் குறித்த வீடியோ :