நவம்பர் 04, சென்னை (Technology News): மோட்டோரோலா நிறுவனம் அதன் புதிய மோட்டோ ஜி67 பவர் (Moto G67 Power Smartphone) ஸ்மார்ட்போனை நாளை (நவம்பர் 05) இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. 8ஜிபி ரேம் + 128ஜிபி ரோம் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ரோம் என 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. மேலும், ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து இப்பதிவில் காண்போம். Realme C85 Pro: ரியல்மி சி85 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!
மோட்டோ ஜி67 பவர் சிறப்பம்சங்கள் (Moto G67 Power Specifications):
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் உடன், ஆன்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.
- இதில், 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன், எச்டிஆர் 10, 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.
- கேமராவை பொறுத்தவரையில், பின்புறம் 50எம்பி சோனி எல்ஒய்டி-600 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளன. மேலும், 32எம்பி செல்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
- இந்த ஸ்மார்ட்போனில், 7000mAh பேட்டரி மற்றும் சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதுதவிர, IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட், இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் வசதியும் உள்ளன.
- மேலும், டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.