
மார்ச் 25, சேப்பாக்கம் (Cricket News): இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக அசத்தி வந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin), தற்போது ஐபிஎல் சீசனில் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் களமிறங்கியுள்ள அஸ்வின், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், பேட்டிங்கில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேநேரத்தில், பந்துவீச்சில் அசத்தி, 1 விக்கெட் எடுத்தார். மும்பை அணியின் முக்கிய விக்கெட்டான வில் ஜெக்சை, 11 ரன்களில் அவுட் ஆக்கி வெளியேற்றினார். கடந்த மார்ச் 23, 2025 அன்று நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை அணி மும்பைக்கு எதிராக 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. GT VS PBKS: ஐபிஎல் 2025: இன்று குஜராத் - பஞ்சாப் அணிகள் மோதல்; நேரலை பார்ப்பது எப்படி? போட்டி எங்கே? விபரம் இதோ.!
அஸ்வினின் அசத்தல் சாதனை:
இந்நிலையில், அஸ்வின் ரவிச்சந்திரன் ஐபிஎல் (IPL) தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்தது இருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், இதுவரை 17 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. 18 வது சீசன் ஐபிஎல் தற்போது தொடங்கி இருக்கிறது. இதனிடையே, அஸ்வின் ரவிச்சந்திரன் படைத்த சாதனை குறித்த தகவலும் தெரியவந்துள்ளது. அதாவது, ஐபிஎல் போட்டியில், முதல் ஓவர் முதல் 6 ஓவர் வரையில், பவர்-பிளேவில் சுமார் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்துள்ளார். முதல் 6 ஓவர்களுக்குள் மொத்தமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக அஸ்வின் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
அஸ்வினின் அசத்தல் சாதனை:
Annathe Aattam in the Power Play! 5️⃣0️⃣🔥#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/CGGdA0xvwm
— Chennai Super Kings (@ChennaiIPL) March 25, 2025
2015ம் ஆண்டுக்கு பின் மீண்டும் அதே தருணத்தில் எம்.எஸ் தோனி - அஸ்வின்:
Two eras, One emotion 🦁💛
2015 ➡️2025 ⏩#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/DfKNReI3k9
— Chennai Super Kings (@ChennaiIPL) March 25, 2025