Putin Gifts Car to Kim Jong Un: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு, விலையுயர்ந்த சொந்த நாட்டு தயாரிப்பு காரை பரிசாக வழங்கிய ரஷிய அதிபர்.!

இது உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Kim Jong Un | Vladimir Putin (Photo Credit: Wikipedia)

பிப்ரவரி 20, பியோங்கியாங் (World News): அணுஆயுத சோதனையில் தீவிரமாக ஈடுபடும் வடகொரியா மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடை காரணமாக அந்நாடு பலவிதமான சிரமங்களை எதிர்கொண்டாலும், தொடர்ந்து அமெரிக்காவை அழிக்கும் எண்ணத்துடன் அணுஆயுத தயாரிப்பு முயற்சியில் இறங்கி செயல்படுகிறது. அதேபோல, பிராந்திய பாதுகாப்பு என்ற விஷயத்தினை முன்னிறுத்தி, உக்ரைனின் நேட்டோ படைகள் இணைவு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷியா - உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து சென்றது. இதனால் ரஷியாவின் மீதும் பொருளாதார தடை விதிக்கப்பட்டது. Rituraj Singh Passed Away: துணிவு திரைப்பட பிரபலம்... மூத்த நடிகர் மாரடைப்பால் காலமானார்..! சோகத்தில் திரையுலகினர்..! 

அமெரிக்காவுக்கு எதிராக நேரடியாக இரண்டு நாடுகள்: உலகளாவிய பொருளாதார தடையை ரஷியா சந்தித்தாலும், இந்தியாவுடன் இணக்கமான சூழல் இருப்பதால் தொடர்ந்து கச்சா எண்ணெய் விற்பனை, இந்தியாவில் இருந்து வாழைப்பழம் மற்றும் மாம்பழம் ஏற்றுமதி உட்பட பல விஷயங்களால் இந்தியா - ரஷ்யா நட்புறவு தொடர்ந்து நீண்டு வருகிறது. சமீபத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un), ரஷியா சென்று அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதினை (Vladimir Putin) நேரில் சந்தித்து இருந்தார். இருநாட்டு அதிபர்கள் சந்திப்புக்கு பின் இராணுவ ரீதியாக ரஷியா சில தொழில்நுட்பங்களை வடகொரியாவுக்கு வழங்கவும் முன்வந்தது. அமெரிக்காவின் பனிப்போர் யுத்தத்தில் உலகில் தனித்து விடப்பட்ட நாடுகளை போல ரஷியா, கொரியா தனித்தனியே தவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வேலையில், அவர்கள் இணைந்தனர். Apple iPhone10 Years Revenue: 10 ஆண்டுகளில் 1.65 ட்ரில்லியன் டாலர் வருமானம் ஈட்டி அசத்திய ஆப்பிள்; ஐபோன் விற்பனையில் மாபெரும் சாதனை.! 

கார் பரிசு வழங்கிய ரஷ்யா: இரண்டு நாடு அதிபர்களின் சந்திப்பு உலகளாவிய பதற்றத்தை தந்த நிலையில், தற்போது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தனது நாட்டின் தயாரிப்பு கார் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார். இந்த தகவல் இருநாட்டு தரப்பிலும் உறுதி செய்யப்பட்டு, பரிசை பெற்றுக்கொண்ட வடகொரியாவுக்கு ரஷ்யாவுக்கு தனது நன்றியை தெரிவித்து இருக்கிறது. இருநாட்டு அதிபர்களும் கடந்த செப்டம்பர் மாதம் சந்தித்துக்கொண்டபோது, ரஷ்ய தயாரிப்பில் உருவான காரில் பயணம் செய்தனர். அதனைத்தொடர்ந்து கார் தற்போது பரிசாக வழங்கப்பட்டுள்ளது.