Russian President Vladimir Putin: "என்னை பொறுத்தவரை நாட்டின் பாதுகாப்பு தான் முக்கியம்.." 5வது முறையாக ரஷ்ய அதிபரானார் புதின்..!
ரஷ்யாவின் புதிய அதிபராக 5வது முறையாக மீண்டும் விளாடிமிர் புதின் பொறுப்பேற்றார்.
மே 08, மாஸ்கோ (World News): ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் (Vladimir Putin) செயல்பட்டு வருகிறார். கடந்த 1999 முதல் அவர் ரஷ்யாவின் அதிபராக உள்ளார். இந்நிலையில் தான் ரஷ்ய அதிபர் தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை எதிர்த்து தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி சார்பில் லியோனிட் ஸ்லட்ஸ்கி, புதிய மக்கள் கட்சி சார்பில் விளாடிஸ்லாவ் டாவன்கோவ், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிகோலாய் கரிடோனோவ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் விளாடிமிர் புதின் வெற்றி பெற்றார். Tamil Nadu Gold Carrying Mini Truck Accident: 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற லாரி.. திடீரென கவிழ்ந்து விபத்து.. ஈரோட்டில் பரபரப்பு..!
உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதினுக்கு எதிர்ப்பு அலை இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய அதிபராக (Russian President) விளாடிமிர் புதின் பதவியேற்பது இது 5வது முறையாகும். நேற்று புதிய அதிபராக 5வது முறையாக மீண்டும் விளாடிமிர் புதின் பொறுப்பேற்றார். ரஷ்ய அதிபராக பதவியேற்ற பிறகு விளாடிமிர் புதின் பேசியதாவது, ‛‛நாடு முழுவதும் வசிக்கும் ரஷ்யர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என்னை பொறுத்தவரை நாட்டின் பாதுகாப்பு தான் முக்கியம். அதற்கு நான் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறேன். தாய் நாட்டுக்காக போராடும் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.