gold (Photo Credit: Pixabay)

மே 08, ஈரோடு (Erode News): சேலம் - கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் கோயம்புத்தூரில் இருந்து சேலம் நோக்கி செக்யூல் லாஜிஸ்டிக் என்ற பெயரில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரி முழுவதும் பல்வேறு தனியார் நகைக்கடைகளுக்கு அனுப்ப வேண்டிய தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் நிரப்பப்பட்டிருந்தது. சுமார் 810 கிலோ எடை கொண்ட இந்த தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ. 666 கோடி என கூறப்படுகிறது. இந்த லாரியில் ஓட்டுநர் சசிக்குமார் (வயது 29) ஓட்டி வர துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் பால்ராஜ் (வயது 40) மற்றும் உதவியாளர் நவீன் (வயது 21) ஆகியோர் உடன் வந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சித்தோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சமத்துவபுரம் மேடு அருகே சென்றபோது பலத்த சூறாவளி காற்று வீசியது. அப்போது, வாகனத்துக்கு முன்னால் சென்ற லாரியின் மேல் மூடப்பட்டிருந்த தார்பாய் கழன்று, காற்றில் பறந்து வந்து சரக்கு வாகனத்தின் முன்பகுதியில் மூடியுள்ளது. இதனால், நிலை தடுமாறிய ஓட்டுநர் சசிக்குமார் இடது புறமாக திருப்பியபோது, லாரி சாலையின் பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த வாகனத்தில், பிரத்யேக லாக்கர் வசதி வடிவமைக்கப்பட்டு இருந்ததால், தங்கத்துக்கு சேதம் ஏற்படவில்லை. Man Chops Off Tongue: கடவுளுக்கு பூஜை செய்ய நாக்கை அறுத்த நபர்.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தங்க நகை நிறுவனத்தினர் மற்றும் காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மீட்பு வாகன உதவியுடன் சரக்கு வாகனத்தை மீட்டு சித்தோடு காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். அங்கிருந்து மற்றொரு வாகனத்தில், துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்புடன், தங்கம், சேலத்துக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது.