Russia America Fighter Jet: அமெரிக்கா போர் விமானத்தை மோதுவது போல சீறிப்பாய்ந்த ரஷிய போர் விமானம்.!
அலஸ்க்காவில் பாதுகாப்பு ரோந்து பணிகளில் ஈடுபட்டு இருந்த அமெரிக்கா போர் விமானத்தை, ரஷிய எல்லைக்குள் விமானம் வந்துவிடக்கூடாது என அமெரிக்க போர் விமானத்தை ரஷிய விமானி எச்சரித்துவிட்டுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
அக்டோபர் 05, அலாஸ்கா (World News): உலகளவில் இருபெரும் வல்லரசுகளாக இருக்கும் அமெரிக்காவும், ரஷியாவும் பனிப்போரில் ஈடுபட்டு வருகிறது. விளையாட்டுகளில் தொடங்கி பல்வேறு விஷயங்களில் போட்டாபோட்டி செயல்பட்டு வரும் இரண்டு நாடுகளும், அவ்வப்போது வார்தைப்போரில் ஈடுபடுவதும் உண்டு. ரஷியாவின் பிராந்திய பாதுகாப்பு கருதி, அந்நாட்டு உக்ரைன் மீது படையெடுத்து சென்றது. உக்ரைன் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல நாடுகள் அடங்கிய நேட்டோ படையுடன் இணைய முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், உக்ரைனின் முயற்சி எதிர்காலத்தில் ரஷியாவுக்கு தீங்காக அமையலாம் என கூறி, உக்ரைன் மீது தாக்குதல் முன்னெடுக்கப்படுகிறது. Boat Capsize Accident: நைஜீரியா படகு விபத்தில் 60 பேர் பலி.. இன்னும் 80 பேர் மாயம்..!
பொருளாதார தடையை எதிர்கொள்ளும் ரஷியா:
அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் நேரடியாக போர்க்களத்திற்கு வரவில்லை என்றாலும், ஆயுதம், நிதி உதவிகளை உக்ரைனுக்கு வழங்கி, அந்நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர். மேலும், அமெரிக்கா - ரஷியா இடையே நிலவிய பனிப்போருக்கு தீர்வுகாணும் வகையில், ஐ.நா மன்றம் வாயிலாக பல்வேறு பொருளாதார தடைகளும் அதிரடியாக விதிக்கப்பட்டன. இதனால் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் சீர்குலைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஷியா தனது இந்தியா, சீனா, வடகொரியா உட்பட பல நட்பு நாடுகளிடம் கச்சா எண்ணெய் விற்பனை செய்வது, பிற பொருட்களை ஏற்றுமதி-இறக்குமதி செய்வது என வர்த்தகத்தில் ஈடுபட்டு தன்னை தக்கவைக்கிறது. World Animal Day 2024: உலக விலங்குகள் தினம்.. இந்தியாவில் உள்ள செல்லப்பிராணிகள் சட்டத்தைப் பற்றி தெரிந்துக் கொள்வோமா?!
வான்வழி பயிற்சியில் விமானிகள் மோதல் போக்கு:
இந்நிலையில், ரஷியா - அமெரிக்கா நாடுகளின் நிலப்பரப்பு சந்தித்துக்கொள்ளும் டியோமென்ட் ஐஸ்லாண்ட் (Diomedes Islands) பகுதியில், எல்லை பாதுகாப்பு கருதி இருநாட்டு இராணுவமும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அங்கு பிரத்தியேக விமானப்படைத்தளமும், கப்பற்படையும் முகாமிட்டு இருக்கும். இதனிடையே, சம்பவத்தன்று அமெரிக்கா எப்16 ரக போர் விமானம் அலாஸ்கா பகுதியில் வான்வழி பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும்போது, அதனை அச்சுறுத்தும் வகையில், மிகவும் நெருக்கமாக ரஷிய விமானி தனது சு-35 ரக போர் விமானத்தை இயக்கிச் சென்றார். இதன் காணொளிகள் வைரலாகி வருகின்றன.
அமெரிக்கா - ரஷியா விமானங்கள் சந்தித்துக்கொண்ட காணொளி: