அக்டோபர் 04, புதுடெல்லி (Special Day): இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர், இறைத் தூதுவராக போற்றப்பட்ட அசிசி என்பவருடைய நினைவு நாளைக் கொண்டாடும் வகையில், உலக விலங்குகள் தினம் (World Animal Day) கடைபிடிக்கப்பட்டுவருகிறது. முதன்முதலாக 1931-ம் ஆண்டு, இத்தாலியின் புளோரன்ஸ் நகரில்தான் விலங்குகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், உலக அளவில் கொண்டாடப்பட்டுவருகிறது. விலங்குகள் மீட்புக் கூடங்களுக்கு ஏதாவது பங்களிப்பது, விலங்குகள் நலப் பிரச்சாரங்களைத் தொடங்குவது மற்றும் பலவற்றின் மூலம் மக்கள் இந்த நாளை நினைவுகூறுகின்றனர். White Gold: வெள்ளைத் தங்கம் லித்தியம் கண்டுபிடிப்பு.. பணக்கார நாடாகுமா இந்தியா?!
செல்லப்பிராணிகள் சட்டம் (Pet Law): இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51A (g) பிரிவு கீழ் ஒவ்வொரு இந்திய குடிமகனும் அனைத்து உயிரினங்களின் மீதும் கருணை காட்ட வேண்டும் மற்றூம் பாதுக்காக்கவும் வேண்டும். செல்லப்பிராணிகளை அடுக்குமாடி குடியிருப்புகளில் அல்லது கேட்டட் கம்யூனிட்டிகளில் வளர்க்கத் தடை விதிப்பது குற்றமாகும். விலங்குகள் வன்கொடுமை சட்டம் 1960. 11(3) படி, அனைத்து உயிரினங்களின் மீதும் அன்பும் கருணையும் காட்ட வேண்டும். நாய்களுக்காக விதிக்கப்பட்ட சட்டங்களை அனைத்து நிர்வாக குழுக்கள், குடியுருப்பு சங்கங்கள், செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.