அக்டோபர் 04, அபுஜா (World News): வடக்கு நைஜீரியாவின் நைஜர் மாநிலம் (Niger), முண்டி என்ற இடத்தில் வருடாந்திர இஸ்லாமிய திருவிழா நேற்று முன்தினம் (அக்டோபர் 02) நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற சுமார் 300 பேர் நேற்று முன்தினம் இரவு நைஜர் ஆற்றில் (Niger River) ஒரு படகில் கபாஜிபோ என்ற இடம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். அந்தப் படகில் ஆண்களை விட பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். Marburg Virus Scare: வேகமாக பரவும் மார்பர்க் வைரஸ்.. மிரளும் உலக நாடுகள்..!
இந்நிலையில், நைஜர் மாநிலத்தின் மோக்வா பகுதியில் இவர்களின் படகு (Boat Capsized) திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. தகவலறிந்து மீட்புக் குழுவினரும் தன்னார்வலர்களும் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் சுமார் 60 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும், சுமார் 160 பேர் கரைக்கு நீந்திச் சென்றும், மீட்புக் குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில், எஞ்சிய 80 பயணிகள் இதுவரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழப்பு 100-யை தாண்டக் கூடும் என அஞ்சப்படுகின்றது.
இதன் முதற்கட்ட விசாரணையில், படகுகளை முறையாக பராமரிக்காதது, அளவுக்கு மேல் பயணிகளை ஏற்றுவது ஆகியவை படகு விபத்துகளுக்கு காரணங்களாக அமைந்துள்ளது. தற்போது, விபத்துக்குள்ளான படகில் சுமார் 300 பேர் பயணம் செய்த நிலையில், 100 பேர் மட்டுமே அப்படகில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.