Serial Killer Arrest: 42 பெண்களை கொடூரமாக கொன்று புதைத்த சீரியல் கில்லர்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்.. கென்யாவில் பயங்கரம்..!

கென்யாவில் குப்பை கிடங்கு ஒன்றில் சுமார் 42 பெண்களை கொடூரமாக கொன்று புதைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Serial Killer Arrested In Kenya (Photo Credit: @ATNewsSA X)

ஜூலை 16, நைரோபி (World News): கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள குப்பை கிடங்கு (Garbage Dump) ஒன்றில், கடந்த ஜூலை 11-ஆம் தேதி அன்று பிளாஸ்டிக் பைகளில் வெட்டப்பட்டும், சிதைக்கப்பட்டும் 9 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர கொலை (Murder) சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, காலின்ஸ் ஜூமைசி கலுஷா என்ற 33 வயது நபர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர், அவருடைய செல்போனை சோதனை செய்ததில், அவர்தான் இந்த கொலையாளி என காவல்துறையினர் சந்தேகித்தினர்.

இந்நிலையில், நேற்று (ஜூலை 15) அதிகாலையில் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், குப்பை கிடங்கில் கிடந்த 9 பெண்களை கொடூரமாக கொன்றது தான்தான் என்று ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், பல திடுக்கிடும் சம்பவங்கள் குறித்து தெரிவிக்கையில் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். அதில், கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கிட்டதட்ட 42 பெண்களை இவர் கொன்று புதைத்ததாகவும், அதில் தான் முதலில் கொலை செய்தது தன் மனைவியைதான் என்றும் தெரிவித்துள்ளார். Teenager Flirted With Girls: திருமண ஆசை வார்த்தை கூறி பல பெண்களுடன் உல்லாசம்; நகை, பணம் கொள்ளையடித்து வாலிபர் தப்பியோட்டம்..!

இதுகுறித்து அந்நாட்டின் குற்றவியல் புலனாய்வு இயக்குநரகத்தின் தலைவர் முகமது அமீன் தெரிவிக்கையில், 'இந்த நபர் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் அவரது மனைவி உட்பட 42 பெண்களை கொடூரமாக உடல்களை சிதைத்து கொன்று புதைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும், கொலை செய்யப்பட்ட அனைத்து பெண்களும் ஒரே பாணியில் கொல்லப்பட்டுள்ளனர். இதன்மூலம் இவர் ஒரு சீரியல் கில்லர் என்பதை இந்த விசாரணையின் மூலம் தெரியவந்தது.

இதனையடுத்து, குப்பை கிடங்கிளிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்த அவரது வீட்டை சோதனை செய்தோம். அங்கு நைலான் சாக்குகள், கயிறு, ஒரே ஜோடி ரப்பர் கையுறைகள், கத்தி, அடையாள அட்டைகள், பெண்களின் உள்ளாடைகள், 10  தொலைபேசிகள், மடிக்கணினி உள்ளிட்ட ஆதாரங்கள் கிடைத்தன' என்று அவர் தெரிவித்துள்ளார். வாக்குமூலம் அடிப்படையில், இவர் கொன்று புதைத்த 16 உடல்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், 42 பெண்கள் 18-30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.