Cargo Ship Sank: தென்கொரியா சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது – கடலோர காவல்படையினர் மீட்பு பணிகள் தீவிரம்..!
கடலோர காவல்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மார்ச் 20, டோக்கியோ (World News): தென்கொரியாவில் இருந்து சென்ற சரக்கு கப்பல், ஜப்பானிய தீவின் அருகே சென்றபோது அந்த கப்பல் கடலில் மூழ்கியது. உடனே கப்பல் சாயத்தொடங்கியதும் அதிலிருந்த ஊழியர்கள் அனைவரும் கடலில் குதித்தனர். தகவலறிந்த ஜப்பான் கடலோரக் காவல்படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் தத்தளித்த 4 ஊழியர்களையும் மீட்டுள்ளனர். மேலும் 7 ஊழியர்களை காணவில்லை, அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். Mint Water Benefits: புதினா நீரை பருகுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்..?
இதனையடுத்து, கியோயங் சன் என்ற ரசாயனக் கப்பல் மூழ்கிக்கொண்டிருப்பதாகவும், ஜப்பானின் முட்சுர் தீவுக்கு அருகே உள்ள பகுதியில் தஞ்சம் அடைந்ததாகவும் தகவல் அறிந்ததின் பேரில் மீட்புக் குழுவினரை அங்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கடலோரக் காவல்படை அறிவித்துள்ளது.
மேலும், இந்தோனேசியாவைச் சேர்ந்த 8 பேரும், தென் கொரியாவைச் சேர்ந்த 2 பேரும், சீனாவைச் சேர்ந்த ஒருவரும் அந்தக் கப்பலில் மொத்தமாக 11 ஊழியர்கள் பயணித்துள்ளனர் என்று என்.எச்.கே. தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகியது. இச்சம்பவம் குறித்து, கப்பல் எப்படி மூழ்கியது என்பது பற்றி எந்த விவரமும் தெரியவில்லை.