PM Modi Japan Visit (Photo Credit : @Vasudha156 / @narendramodi X)

ஆகஸ்ட் 29, ஜப்பான் (World News): இந்தியா - ஜப்பான் வருடாந்திர 15-வது உச்சி மாநாடு இன்றும், நாளையும் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி (PM Modi Japan Visit) நேற்று இரவு டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு டோக்கியோ சென்றடைந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் எட்டாவது ஜப்பானிய பயணம் இதுவாகும். இந்த பயணத்தில் உச்சி மாநாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் முதல் உச்சி மாநாடு இது ஆகும். Gold Rate Today: தங்கம் விலை இன்று ரூ.520 உயர்வு.. புதிய உச்சத்தை நெருங்கும் தங்கம்.!

இந்திய கலாச்சார உடையில் நடனமாடி இந்திய பிரதமர் வரவேற்பு :

இருநாட்டு பிரதமர்களும் கூட்டான்மை நல்லுறவு, பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்ப பகிர்வு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மேலும் இருவரும் புல்லட் ரயில் பயணம் செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பயணத்தில் இருதரப்பு நல்லுறவு மேலும் வளம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானிய மக்கள் பலரும் இந்திய கலாச்சார உடைகளை அணிந்து (Japanese Peoples Welcomes Modi) இந்திய பிரதமரை நடனமாடி வரவேற்றனர். மேலும் இந்திய வம்சாவளியினரும் பிரதமரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

ஜப்பானில் 2 நாள் சுற்றுப்பயணம் :

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி அமெரிக்கா - ஜப்பான் இடையே இன்று நடைபெறவிருந்த வணிக ரீதியிலான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைத்ததன் பேரில் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதியும், செப்டம்பர் 1 ஆம் தேதியும் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்திய பிரதமருக்கு ஜப்பானில் உற்சாக வரவேற்பு :