மார்ச் 20, சென்னை (Health Tips): தற்போது கோடைகாலம் தொடங்கி விட்டாதல் கொளுத்தும் வெயிலால் உடலில் உள்ள நீர்ச்சத்து வற்றிப்போகிறது. இதனை தடுக்கவும் மேலும் உடல் எடையை குறைக்கவும் சிறந்த பானமாக புதினா கலந்த தண்ணீர் உள்ளது. ஆரோக்கியமாகவும் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளவும் மற்றும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. அடர் பச்சை வண்ணத்தில் இருக்கும் புதினா இலை நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து செரிமான அமைப்பை வலுப்படுத்துகிறது. புதினா நீரை பருகுவதால் கிடைக்கும் பலன்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். Cricket Updates: சூர்யாகுமார் இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை – மும்பை அணிக்கு பெரும் பின்னடைவு..!
உடல் எடை குறைக்க உதவுகிறது: புதினா நீரை பருகுவதன் மூலம் புதினா இலையில் உள்ள மெந்தால் நமது செரிமான கோளாறு பிரச்சனைகளை சரி செய்கிறது. மேலும், அஜீரணம், வாய்வு, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது. இதனால், நம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.
உணவு கட்டுப்பாடு: புதினா இலையில் உள்ள இயற்கையான கலவைகள் நமது பசியை அடக்கி, உணவு கட்டுப்பாட்டோடு வைத்துக்கொள்ள உதவுகிறது. இதன்மூலமும் நாம் உடல் எடையை குறைக்க முடியும்.
நீர்ச்சத்து: புதினா நீர் வெறும் தாகத்தை மட்டும் தீர்க்காமல், உடலில் உள்ள நீர்ச்சத்து குறையமாலும் பார்த்துக்கொள்கிறது. மெடபாலிஸம் ஒழுங்குப்படுத்தவும், கொழுப்பை உடைப்பதற்கும் நீர்ச்சத்து தேவைப்படுகிறது.
மெடபாலிஸத்தை அதிகப்படுத்தி கலோரிகளை வழக்கத்தை விட சிறந்த முறையில் எரிக்க உதவுகிறது. மேலும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்தம் செய்கிறது. புதினா நீர் ஒரு இயற்கை நச்சு நீக்கியாக செயல்படுகிறது.