IPL Auction 2025 Live

Nuclear Weapon on Belarus: உக்ரைன் எல்லைக்கு சென்றது ரஷியாவின் அணு ஆயுதம்; ஹிரோஷிமாவை விட 3 மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் - அதிர்ச்சி தகவல் உறுதியானது.!

இதனால் உலக நாடுகள் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளன.

Russian President Vladimir Putin | Nuclear Weapon Blast File Pic (Photo Credit: Twitter / Wikipedia Commons)

ஜூன் 17, பெலாரஸ் (Belarus): ஐரோப்பிய யூனியன் (Europe Union) நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பான நேட்டோ-வுடன் (NATO) இணைய முயற்சித்த உக்ரைன் (Ukraine) நாட்டின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin), பிராந்திய பாதுகாப்பு என்று உக்ரைனின் மீது கடந்த ஆண்டு படையெடுத்து சென்றார். இந்த போர் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி இன்று வரை ஓயாது நடைபெறுகிறது.

உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக இன்று வரை அந்நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelensky) சர்வதேச நாடுகளின் ஆதரவை திரட்டி வருகிறார். அந்நாட்டுக்கு தேவையான பண மற்றும் இராணுவ தளவாடங்கள் உதவியை அமெரிக்கா (US Helps Ukraine Supply Army Equipment) செய்து வருகிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வழியே உக்ரைன் எல்லைக்கு ஆயுதங்கள் சென்றடைகின்றன. அதனை வைத்து உக்ரைன் ரஷியாவை எதிர்த்து வருகிறது. NMODI: பிரதமர் நரேந்திர மோடியே உலகின் சிறந்த தலைவர் – காருக்கு NMODI பதிவெண் பெற்ற அமெரிக்காவாழ் இந்தியர் புகழாரம்.!

போரினை முடிவுக்கு கொண்டு வர போர் தொடங்கிய காலகட்டத்தில் பலநாடுகளில் தலைவர்களும் இந்திய பிரதமர், சீன பிரதமர் உட்பட ரஷியாவின் நெருங்கிய கூட்டாளி நாடுகளின் பிரதமர்களிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணுவதற்கு ரஷியா முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், இவை பிராந்திய பாதுகாப்பு கருதிய நடவடிக்கை என்று தனது நெருங்கிய நட்பு நாடுகளிடம் ரஷியா எடுத்துக்கூறியதால் அவை அமைதியாகின.

இந்த நிலையில், உக்ரைனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தேவையான அனைத்து முயற்சியையும் மேற்கொண்டுள்ள ரஷியா, கடந்த மாதம் பெலாரஸ் நாட்டிற்கு தனது அணு ஆயுத (Atomic Nuclear Weapon) ஏவுகணைகளை அனுப்ப தேவையான நடவடிக்கை எடுத்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், ரஷியா தனது அணு ஆயுதத்தை பெலாரஸ் நாட்டிற்கு அனுப்பி வைத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. New Married Man Died: திருமணமான 15 நாட்களில் இப்படியா நடக்கணும்?.. வேலைக்கு சென்று பிணமாக வீடு திரும்பிய கணவன்; அதிர்ச்சியில் புதுமணப்பெண்.!

இந்த தகவலை ரஷிய அதிபர் புதின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் உறுதி செய்தார் என களத்தகவல்கள் தெரிவிக்கின்றன. பெலாரசில் (Belarus) ரஷியாவின் அணு ஆயுத இருப்பை அந்நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவும் (Aleksandr Lukashenko) உறுதிப்படுத்தியுள்ளார். இது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷியா பெலாரசில் நிலைநிறுத்தியுள்ள அணு ஆயுதம் ஹிரோஷிமா & நாகசாகியில் வீசப்பட்ட அணு ஆயுதத்தை விட 3 முதல் 4 மடங்கு பெரும் அழிவை தரும் என அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ் நிறுவனம் தனது செய்தியில் தெரிவித்துள்ளது. இவ்வாறான பல தகவல்கள் உக்ரைன் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே போரின் காரணமாக சிதைந்துஉள்ள உக்ரைன் ஒருவேளை அணு ஆயுதத்தால் தாக்கப்பட்டால் நிலை என்னவாகும்? இது உலகப்போருக்கான காரணியாக அமைந்திடுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது.