Beriev Be-200 Altair: நீரில் இருந்து மேலெழும்பும் விமானத்தை உருவாக்கி வெற்றிகரமாக சோதித்த ரஷியா; போக்குவரத்து, பாதுகாப்பு, தேடல் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என அறிவிப்பு.!
இதன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஆகஸ்ட் 12, ரஷ்யா (Russia News): உக்ரைன் நாட்டை தன்னிடம் சரணடையச்சொல்லி ரஷியா, உக்ரைனின் மீது படையெடுத்து சென்றதால் மேற்குலக நாடுகள் அனைத்தும் ரஷியாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பொருளாதார தடைகளை விதித்து ரஷியாவை தனிமைப்படுத்த முயற்சித்தது.
ஆனால், எண்ணெய் வளங்களை ரஷியா ஐரோப்பிய யூனியனுக்கு வழங்கிவந்த நிலையில், அவற்றில் தனது நிலைப்பாடை மாற்றிக்கொண்டு ரஷியா ஐரோப்பிய யூனியனை அவ்வப்போது நிலைகுலைய செய்து வருகிறது. அதேபோல, ஐரோப்பிய நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளை இன்று வரை சுரண்டி பிழைத்து வருகிறது.
இதற்கு எதிராகவும் அந்நாடுகளில் தனது காய்களை ரஷியா திரைமறைவில் நகர்த்தி மேற்குலக நாடுகளுக்கு ஆப்பு வைத்து வருகிறது. இவை ஒருபுறம் இருப்பினும் ரஷியா தனது நாட்டின் இராணுவ மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் கண்டுபிடிப்புகளை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. Shimla Bus Accident: நிலச்சரிவால் விபத்திற்குள்ளான பேருந்து; 4 பேர் கவலைக்கிடம்., 8 பேர் படுகாயம்.!
இந்நிலையில், ரஷியா தனது Beriev Be-200 மீட்பு ரோந்து கப்பலை வடிவமைத்து வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த மீட்பு விமானம் தீயணைப்பு மற்றும் கடல் ரோந்து பணிகளுக்கு உபயோகம் செய்யப்படும் என்றும், Beriev நிறுவனத்தால் கட்டப்பட்ட நீர்ஜெட் கடலில் தரையிறங்கி பின் கடலில் இருந்தே உயர பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீரிலும்-நிலத்திலும் இயங்கும் ஜெட் விமானத்தை ரஷியா சோதனை செய்து வீடியோ வெளியிட்டுள்ளது. இது சரக்கு மற்றும் பயணிகளின் போக்கவுரதிர்க்கவும் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் அதிகபட்சமாக 72 பயணிகள் மற்றும் சரக்குகள் பயணிக்கலாம் என Beriev நிறுவனம் தெரிவித்துள்ளது.