Blinken Heads To Middle East: கொடூரமாகும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்.. போரைக் கட்டுப்படுத்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கன் சுற்றுப்பயணம்..!

காசாவில் போர் நிறுத்தம் கொண்டு வரும் முயற்சியாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் பிராந்திய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

Antony Blinken (Photo Credit: @AFP X)

ஜூன் 11, காசா (World News): இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் (Israel Hamas War) கடந்தாண்டு அக்டோபரிலிருந்து நடந்து வருகிறது. இந்த போரில் காசா தரப்பில் இதுவரை சுமார் 35 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதனை நிராகரித்து விட்டார். மேலும் 14 இலட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்தனர்.

ரஃபா தாக்குதல்: அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் இப்போது தெற்கு காசாவின் ரஃபா பகுதியில் தான் தாக்குதல் நடத்தியது. தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் மே 26 ஆம் தேதி குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 249 பேர் காயமடைந்ததாகவும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தன. Modi Cabinet 3.0 Announcement: மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற நபர்களும், ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகளும்.. முழு விபரம் இதோ.!

பிளிங்கன் சுற்றுப்பயணம்: இந்த சூழலில் காசாவில் போர் நிறுத்தம் கொண்டு வரும் முயற்சியாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் (US Secretary of State Antony Blinken) பிராந்திய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். முதற்கட்டமாக, இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதில் முக்கிய பங்கு வகிக்கும் எகிப்துக்குச் சென்ற பிளிங்கன், அங்கு தலைநகர் கெய்ரோவில் அதிபர் அப்தெல் ஃபட்டா அல்சிசியைச் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, இஸ்ரேல், ஜோர்டான், கத்தார் ஆகிய நாடுகளுக்கும் சென்று ஆன்டனி பிளிங்கன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.