BMW Recalls Over 1.5 Million Models: பிரேக் சரியில்லை.. பல மில்லியன் கார்களை திரும்பப் பெற்ற பிஎம்டபிள்யூ..!

சொகுசு கார் தயாரிப்பாளரான பிஎம்டபிள்யூ பிரேக் சிஸ்டம் குறைபாடுகள் காரணமாக உலக அளவில் 1.5 மில்லியன் வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

BMW (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 11, புதுடெல்லி (New Delhi): பிஎம்டபிள்யூ (BMW), ஜெர்மனியை சேர்ந்த முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று. பல்வேறு நாடுகளில் கார்களை விற்பனை செய்யும் பிஎம்டபிள்யூ நிறுவனத்துக்கு இந்தியா முக்கியமான மார்க்கெட்டாக விளங்குகிறது. இதன் காரணமாகவே, நம் நாட்டில் புது, புது கார்களை அவ்வப்போது அறிமுகப்படுத்துவதை பிஎம்டபிள்யூ மறப்பதில்லை. Viral Video: வந்தேபாரத் ரயில் கண்ணாடி உடைப்பு.. பகீர் வீடியோ வைரல்.!

இந்நிலையில் பிரேக் சிஸ்டம் குறைபாடுகள் காரணமாக உலக அளவில் சுமார் 1.5 மில்லியன் வாகனங்களை திரும்பப் பெறுவதாக அந்த கார் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் லாபம் 8 முதல் 10% வரை குறைந்துள்ளது. தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்கும் ஒன்பது சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளது.