Hero Lectro Unveils Latest E-Cycle: றெக்கக் கட்டி பறக்கப் போகும் எலக்ட்ரிக் சைக்கிள்.. ஹீரோ லெக்ட்ராவின் இ-சைக்கிள் வெளியீடு..!

ஹீரோ லெக்ட்ரா எச்4 மற்றும் எச்7 பிளஸ் எனும் இ-சைக்கிள்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

Hero Lectro (Photo Credit: @EIEVShow X)

ஏப்ரல் 05, புதுடெல்லி (New Delhi): ஹீரோ லெக்ட்ரோ (Hero Lectro) நிறுவனம், தன்னுடைய தரமான இரண்டு எச்4 மற்றும் எச்7 பிளஸ் இ-சைக்கிள் (H4 and H7+ e-cycles) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் விலை32,499 ரூபாய் மற்றும் 33,499 ரூபாய் ஆகும். மேலும் இந்திய சாலைகளுக்கும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இ-சைக்கிள்களே இவை என அந்த நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

எச்4 சிறப்பம்சங்கள்: இந்த எலெக்ட்ரிக் சைக்கிளை குறைவான தூரத்திற்கு பயன்படுத்தும் மிதிவண்டியாகவே நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 40 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதை முழுமையாக சார்ஜ் செய்ய 4.5 மணி நேரங்களே தேவைப்படும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிலோ மீட்டர் ஆகும். இத்துடன், எல்இடி திரை, ரிஜிட் ஃபோர்க், 160 மிமீ அளவுள்ள ரோடார் கொண்ட டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. International Day of Conscience 2024: "பாட்டி சொல்லைக்கூட தட்டலாம்.. ஆனால் இவர் சொல்லைத் தட்டக்கூடாது.." சர்வதேச மனசாட்சி தினம்..!

எச்7 பிளஸ் சிறப்பம்சங்கள்: எச்4 மாடல் சைக்கிளில் வழங்கப்பட்டு இருக்கும் அதே பேட்டரி பேக்கே இதிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிலோ மீட்டர் ஆகும். இத்துடன், சிறிய எல்இடி திரை வழங்கப்பட்டு இருக்கிறது. அதன் மூலம் பேட்டரி பவர், வேகம் போன்ற தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.