Heart (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 05, புதுடெல்லி (New Delhi): ஒரு மனிதன் வாழ வேண்டும் என்றால் எப்படினாலும் வாழலாம் என்பது வாழ்கை இல்லை. இங்கே நல்லது கேட்டது என்று உள்ளது. ஒருவர் பார்வைக்கு நல்லதாக இருப்பது மற்றொருவர் பார்வைக்கு கேட்டதாக இருக்கலாம். யார்மேலும் தவறு இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நம்ப மனசுக்கு எது சரி என்று படுதோ, அதை சேயும் பொழுது ஒரு நிம்மதி நமக்கு கிடைக்குது.

இதுக்கு சிறந்த எடுத்துக்காட்டு நிமிர்ந்து நில் பட கிளைமேக்ஸ் தான். "உள்ள ஒருத்தன் இருக்கான்.. நான் அவன்ட கேட்டு வந்து சொல்றேன்.." என்று ஜெயம் ரவி மனசாட்சியைப் பற்றி கூறும் போது ஊழல் செய்த அனைவரும் திகைப்பார்கள். அப்போது மனசாட்சியைப் பற்றி ஜெயம் ரவி எடுத்துரைக்கும் ஒரு வசனம் வரும். அதைவிட சிறந்த உரை மனசாட்சிக்கு எங்கும் இருக்காது, "எனக்குள்ள மட்டுமில்ல.. உங்க எல்லார்க்குள்ளும் ஒருத்தன் இருக்கான்.. அவன் மட்டும் தான் உண்மைய பேசுவான்.. இதுவர நான் பண்ணதெல்லாம் தப்புங்குறான்.. என்ன கேவலமா திட்டுறான்.. அவன் திட்டுனா நான் கேட்டுப்பேன்.. ஏன்னா.. அவன கொன்னுட்டா நான் மிருகம் ஆகிருவேன்ல.. பாதி பேருக்கு மேல இங்க அப்படித்தான அலையிறாங்க.." Tamil Puthandu Wish 2024: உள்ளம் கவர்ந்தவருடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடி மகிழுங்கள் - அசத்தல் கவிதையுடன் சிறந்த வாழ்த்துக்கள் இதோ.!

இந்த வரிகளில் பல உண்மைகள் அடங்கி இருக்கிறது. இங்கே பல பேர் குற்றங்கள் செய்து விட்டு குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டும் தற்கொலை செய்துக் கொண்டும் உள்ளனர். இதற்கு ஒரு விஷயம் செய்வதற்கு முன்னரே மனசாட்சி பேச்சு கேட்டு நடந்துக் கொண்டால், குற்றங்களும் குறையும், மன நிம்மதியும் கிடைக்கும். இப்படிப்பட்ட மனசாட்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவே இந்த சர்வதேச மனசாட்சி தினம் (International Day of Conscience) கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் மூலம் மக்கள் சுயமாக சிந்தித்து நல்ல முடிவுகளை எடுக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். எனவே இந்த நாளில் இருந்து நீங்களும் மனசாட்சி பேச்சைக் கேட்டு முடிவுகளை எடுத்து மன நிம்மதியுடன் வாழ்வினை சந்தோசமாக நடத்துங்கள்.