Toyota’s Electric SUV For India: டொயோட்டா களமிறக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்.. இதன் விலை எவ்வளவு தெரியுமா?.!
மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மார்ச் 05, புதுடெல்லி (New Delhi): இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று தான் மாருதி சுஸுகி (Maruti Suzuki). இந்த நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அது மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX) ஆகும். தற்போது இந்த காரின் அடிப்படையில் உருவாக்கப்படும் எலெக்ட்ரிக் கார் ஒன்றை டொயோட்டா (Toyota) நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதுதான் இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும். இதற்காக மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. Flipkart UPI: மற்ற யுபிஐ ஆப்களுக்கு ஆப்பு.. அறிமுகமான பிளிப்கார்ட் யுபிஐ சேவை.. இவ்வளவு சலுகைகளா..!
இந்த எலெக்ட்ரிக் கார் 2025ம் ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும் இந்த எலெக்ட்ரிக் கார் 60 kWh மற்றும் 48 kWh என மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரலாம். இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை அனேகமாக 20 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலை ஆகும். இதன் அதிகாரப்பூர்வ விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.