மார்ச் 05, புதுடெல்லி (New Delhi): இன்று வெளியே செல்லும் பொழுது யாரும் கையில் பணத்தை எடுத்துச் செல்வதில்லை. அனைவரும் டிஜிட்டல் கட்டண முறையை தான் பயன்படுத்தி வருகின்றனர். டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது (UPI) சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. இதனால் அனைவரும் சுலபமாக கட்டணங்களை செலுத்தி வருகின்றோம். தற்போது இந்த டிஜிட்டல் பணவர்த்தனையானது மற்ற நாடுகளிலும் நாம் செய்யுமாறு பல்வேறு அம்சங்கள் அறிமுகமாகி வருகின்றனர். France Enshrines Abortion Rights In Constitution: கருக்கலைப்பு செய்ய பெண்களுக்கு உரிமை.. பிரான்ஸ் நாட்டின் அதிரடி அறிவிப்பு..!
பிளிப்கார்ட் யுபிஐ: இந்நிலையில் பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியுடன் (Flipkart and Axis Bank) இணைந்து தனது சொந்த யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. Flipkart இல் பில் செலுத்துவதற்கு கட்டணம் எதுவும் இல்லை. மேலும் வரையறுக்கப்பட்ட கால சலுகையாக ரூ.10 வரை தள்ளுபடி வழங்குகிறது. கிரெடிட் கார்டுகளில் UPI-க்கான ஆதரவையும் Flipkart சேர்த்துள்ளது. வணிகர்களுக்கு பணம் செலுத்துவதற்காக பயனர்கள் தங்கள் RuPay கிரெடிட் கார்டை Flipkart UPI இல் இணைக்கலாம்.