Anandaraj Family: தமிழ் திரையுலகின் வில்லன் அடையாளம் இன்று நகைச்சுவை நட்சத்திரம்: ஆனந்தராஜின் குடும்பத்துடன் கிளிக்ஸ் இதோ.!
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் ஆனந்தராஜ், தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஜனவரி 21, சென்னை (Chennai): தமிழ் திரையுலகில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஆனந்தராஜ் (AnandaRaj). இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியான 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். பாண்டிச்சேரியில் மருத்துவருக்கு மகனாக பிறந்த ஆனந்தராஜின் தந்தை, மகன் காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என விரும்பி இருக்கிறார். ஆனால், அதற்கான விருப்பம் இன்றி இருந்த ஆனந்தராஜ், சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் அரசு திரைப்பட கல்லூரியில் பட்டம் பயில்கிறார். அங்கு கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமாரும் இவருடன் வகுப்பு நண்பராக பயில்கிறார்.
ரஜினியை கட்டிவைத்து அடித்தவர்: கடந்த 1988ல் ஒருவர் வாழும் ஆலயம் படத்தின் வாயிலாக திரைத்துறையில் அறிமுகமான ஆனந்தராஜ், இன்று வரை முக்கிய நடிகராக இருந்து வருகிறார். தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் தன்னை தலைசிறந்த நடிகராக உருவாக்கிய ஆனந்தராஜ், ரஜினியை பாட்ஷா படத்தில் கட்டிவைத்து அடித்தார். படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானாலும், நிஜத்தில் அமைதியான மற்றும் எளிமையான குணம் கொண்ட ஆனந்தராஜ் 2011க்கு பின் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடிக்க தொடங்கினர். Coconut Rice: நெஞ்சு எரிச்சல் பிரச்சனையே வராத வகையில், சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி?..!
குடும்பத்துடன் ஆனந்தராஜ்: அவரின் நகைச்சுவை கதாபாத்திரமும் மக்களால் வரவேற்கப்பட்டது. இதனையடுத்து, அவர் தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு பிடித்துப்போக, அவரும் அதனை மேற்கொண்டு வருகிறார். இவரின் நடிப்புத்திறமையை பாராட்டி பல விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது தனது குடும்பத்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.