Coconut Rice (Photo Credit: YouTube)

ஜனவரி 21, சென்னை (Chennai): வீட்டில் பொதுவாக சாம்பார், ரசம், புளிக்குழம்பு வகைகள் போன்றவை பிரதானமாக சமைக்கப்படும். சிலர் நேரமின்மை காரணமாக எளிய முறையிலான சமையலை தேர்வு செய்வார்கள். அவர்கள் உணவுக்காக அதிக நேரத்தை செலவிடாமல், குறைந்தபட்சம் 15 முதல் 30 நிமிடத்திற்குள் அப்பணிகளை நிறைவு செய்ய விரும்புவார்கள். அவ்வாறானவர்கள் தேங்காய் சாதத்தினை தேர்வு செய்யலாம். தேங்காய் சாதம் செய்வது மிகவும் சுலபம், அதேபோல சுவையாக இருக்கும். இதனை அடிக்கடி செய்து சாப்பிடாமல் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை என சாப்பிடலாம். செரிமான கோளாறு சார்ந்த பிரச்சனை உடையோர் தேங்காய் சாதத்தினை குறைந்தளவு சாப்பிட்டால் பிரச்சனை இல்லை. இன்று தேங்காய் சாதம் செய்வது குறித்து தெரிந்துகொள்ளலாம். Southeast Indian Ridge Earthquake: மிகப்பெரிய பயங்கர எதிர்கொள்ளவுள்ள இந்தியா?.. தென்கிழக்கு இந்திய முகட்டில் பயங்கர நிலநடுக்கம்.! 

தேங்காய் சாதம் செய்யும் வழிமுறைகள்:

வடித்த சூடான சாதம் - 3 கிண்ணம்,

தேங்காய் துருவியது - 1 கிண்ணம்,

நல்லெண்ணெய் - 3 கரண்டி,

கறிவேப்பில்லை - சிறிதளவு,

முந்திரி - 12,

கடலை பருப்பு - 3 கரண்டி,

சீரகம் - 1 கரண்டி,

மிளகு - 1 கரண்டி,

பெருங்காயத்தூள் - சிறிதளவு,

கடுகு உளுந்து - 2 கரண்டி,

காய்ந்த மிளகாய் - 4,

பச்சை மிளகாய் - 1,

ஏலக்காய் - 2,

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட வானலியில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, கடுகு - உளுந்து, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், முந்திரி, கறிவேப்பில்லை, ஏலக்காய் ஆகிய பொருட்களை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.

இவை நன்கு வறுபட்டதும், பெருங்காயதூளினை சேர்த்து பின் பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் துருவலை அடுத்தடுத்து சேர்த்து நன்கு கிளற வேண்டும். சூடு மிதமான தீயில் இருந்தால் மட்டுமே தேங்காய் சாதம் சுவையுடன் இருக்கும். இவற்றில் முதலில் எண்ணெயில் வறுக்கும் பொருட்களை சேர்த்ததும் சிறிது உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். White House Confirms Houthi Against Attack: ஹவுதிக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும்; வெள்ளை மாளிகை அறிவிப்பு.! 

அதன்பின், தேங்காய் துருவலை கிளறும்போதும் உப்பு சேர்த்து கிளற வேண்டும். லேசான பொன்னிறம் தேங்காய் துருவலுக்கு வந்ததும் உடனடியாக அதில் சூடான சாதம் சேர்த்து கிளற வேண்டும். இப்போது சுவையான தேங்காய் சாதம் தயார்.

குறிப்பு: இவ்வாறான தேங்காய் சாதத்தில் மிளகு, சீரகம் என செரிமானத்தை ஊக்குவிக்கும் பொருட்கள் சேர்க்கப்பட்டு இருப்பதால், தேங்காய் சத்தம் சாப்பிடுவதால் ஏற்படும் நெஞ்சு எரிச்சல் சார்ந்த பிரச்சனை இருக்காது. அளவோடு தேங்காய் சாதத்தை சாப்பிட்டு நலன் பெறலாம்.