IPL Auction 2025 Live

Japan FDFS Tomorrow: நாளை முதல் திரையரங்குகளில் வெளியாகிறது ஜப்பான் திரைப்படம்; முதல் ஷோ எப்போது?.. விபரம் இதோ.!

அணு இமானுவேல், சுனில் உட்பட பலருடன், கார்த்திக்கின் வித்தியாசமான கதாபாத்திரத்தில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படம் நாளை வெளியாகிறது.

Japan Movie Poster (Photo Credit: X)

நவம்பர் 09, சென்னை (Cinema News): ராஜு முருகன் இயக்கத்தில், ஜி.வி பிரகாஷ் குமார் இசையில், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் சூர்யா, சுனில், அணு இமானுவேல், பாவா செல்லத்துரை, கௌசிக், விஜய் மில்டன், சணல் அமான் உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ஜப்பான் (Japan - Tamil Movie).

இப்படம் நடிகர் கார்த்திக்கின் 25வது திரைப்படம் ஆகும். கடந்த 2004ல் ஆயுத எழுத்து திரைப்படத்தில், உதவி இயக்குனராக பணியாற்றி, சிறிய கதாபாத்திரத்தில் திரையில் தோற்றத்தை மட்டுமே காண்பித்திருந்த கார்த்திக், 2007ல் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்து, பலதரப்பு வரவேற்பை பெற்றிருந்தார்.

பருத்திவீரனின் மிகப்பெரிய வெற்றி, கார்த்திக்கை தொடர்ந்து தமிழ் திரையுலகில் பயணிக்க வைத்து, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக்கியுள்ளது. அவரின் 25வது படமான ஜப்பானின் இயக்குனர் ராஜு முருகன் முன்னதாக குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி, மார்டன் லவ் சென்னை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். BRS Minister KT Rama Rao: தேர்தல் பரப்புரையில் பகீர்.. அமைச்சர் பயணித்த வாகனம் அடித்த திடீர் பிரேக்கால் 2 பேர் காயம்.. தலைகுப்புற கவிழ்ந்த அமைச்சர்.! 

இதனைதவிர்த்து தோழா, மெகந்தி சர்க்கஸ், வர்மா ஆகிய படங்களுக்கு உரையாடல்களை எழுதிக்கொடுத்துள்ளார். இவர் எழுத்தாளரும், பத்திரிகையாளரும் ஆவார். தற்போது அவரின் இயக்கத்தில் வெளியான ஜப்பான் திரைப்படம், ரசிகர்களிடையே மிகுந்த ஆவலினை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாடு அரசின் அனுமதிப்படி, நாளை காலை 09:00 மணியளவில் ஜப்பான் திரைப்படம் தமிழகமெங்கும் வெளியாகிறது. நாளை முதல் நவ.15ம் தேதி வரை நாளொன்றுக்கு 5 சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ள தமிழ்நாடு அரசு, காலை 09:00 மணிக்கு முதல் காட்சி தொடங்கி, இரவு 01:30க்கு இறுதிக்காட்சியை திரையிட்டுக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.