நவம்பர் 09, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் (Telangana State Assembly Poll 2023) நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஆளுங்கட்சியான பாரதிய ராஷ்ட்ரிய சமிதி (Bharat Rashtra Samithi BRS), மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தொடர்ந்து தீவிர களப்பணியை மேற்கொண்டுள்ளது.

அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள், அமைச்சர்கள் தலைமையில் அனல்பறக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது. மற்றொரு புறத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சியை அமைக்க தனது முழுசெயல்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அம்மாநில அரசியல் நிலவரம் தற்போது தேர்தலையொட்டி உச்சகட்ட பரபரப்புடன் இயங்கி வருகிறது.

இந்நிலையில், அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் மகனும், பி.ஆர்.எஸ் கட்சியின் செயல் தலைவர், மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்து வருபவர் கே.டி ராமராவ். இவர் தீவிர பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டு வருகிறார். Youngster Atrocity With Bike: சென்னை சாலையில் பைக் வைத்து அட்ராசிட்டி; அதிர்ச்சி வீடியோ வைரல்.. நடவடிக்கை எடுக்க குவியும் கோரிக்கை..! 

இந்நிலையில், தொகுதிவாரியாக பிரச்சாரம் செய்து வந்த அமைச்சர் கே.டி ராமராவ், இன்று அங்குள்ள அரமூர் தொகுதியில், சட்டப்பேரவை வேட்பாளர் ஜீவன் ரெட்டியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அமைச்சருடன், எம்.எல்.ஏ வேட்பாளர் மற்றும் எம்.பி சுரேஷ் ரெட்டி ஆகியோர் பிரச்சார வாகனத்தில் பயணித்தவர் வாக்கு சேகரித்தனர்.

அச்சமயம், முன்னாள் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் திடீரென நின்றுவிட, அமைச்சர் பயணித்த வாகனத்தின் ஓட்டுநர் சடன்பிரேக் அடித்தார். இதனை யாரும் எதிர்பாராத நிலையில், அமைச்சர் தலைகீழாக வாகனத்தில் நின்றுகொண்டார்.

இரண்டு பேர் மட்டும் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அமைச்சரும் அங்கிருந்து மேற்படி பிரச்சாரத்திற்கு விரைந்து பயணித்தார். இதனால் அப்பகுதியில் லேசான பரபரப்பு சூழல் ஏற்பட்டது.