Thulladha Manamum Thullum: ருக்குவின் தவிப்பும், குட்டியின் ஏக்கமும் நினைவிருக்குதா? - துள்ளாத மனமும் துள்ளும் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு.!

விஜயின் திரையுலக பயணத்தில் முக்கிய படமாக அமைந்த துள்ளாத மனமும் துள்ளும், இன்றளவும் ரசிகர்களின் மனதில் இருந்து நீங்காத காதல் காவியம் ஆகும்.

Thulladha Manamum Thullum (Photo Credit: @Ragunanthen1992 / @NithinK67232605 X)

ஜனவரி 29, சென்னை (Cinema News): கடந்த 1999 ஆம் ஆண்டு எழில் இயக்கத்தில், காதல் திரைப்படமாக உருவாகி வெளியானது துள்ளாத மனமும் துள்ளும் (Thulladha Manamum Thullum), படத்தின் வசனங்களை பிரசாந்த் குமார் எழுதியிருந்தார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் (Vijay), சிம்ரன் (Simran), மணிவண்ணன், தாமு, வையாபுரி உட்பட பலரும் நடித்திருந்தனர். ஆர்.பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் (Super Good Flims) தயாரித்து வழங்கிய படத்திற்கு, எஸ்.ஏ ராஜ்குமார் இசையமைத்திருந்தார். செல்வா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டு இருந்தார்.

குட்டியாக மனதில் வாழ்ந்த விஜய்: இப்படம் பொங்கல் பண்டிகையை கடந்து ஜனவரி 29ஆம் தேதி அன்று 1999ம் ஆண்டு திரையிடப்பட்டது. இப்படத்திற்கு கிடைத்த வெற்றி அன்றைய நாட்களிலேயே தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஹிந்தி, ஒடியா ஆகிய மொழிகளில் இப்படத்தை மொழிபெயர்த்து வெளியிட வைத்தது. படத்தில் குட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜயையும், ருக்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிம்ரனையும் ரசிகர்கள் பேரன்புடன் ரசித்து கொண்டாடினர். இருவரும் ஒவ்வொரு காட்சிகளிலும் ரசிகர்களை கவர்னர். US Troops Killed: 3 அமெரிக்க துருப்புகள் பலியானதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம்.. ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்?..! 

Thulladha Manamum Thullum (Photo Credit: @Josephoffl X)

முத்து-முத்தான காதல் பாடல்கள்: பாலாசிரியர் வைரமுத்து மற்றும் முத்து ஆகியோரின் வரிகளில் உருவான பாடலுக்கு எஸ்ஏ ராஜ்குமார் திரைப்பட இசையமைத்து, ரசிகர்களை தனது இசையால் கட்டிப்போட்டார். தொடு தொடு எனவே வானவில், இன்னிசை பாடிவரும், இருபது கோடி, மேகமாய் வந்து போகிறேன், காக்கை சிறகினிலே ஆகிய பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற பாடல்களாக இருக்கின்றன. கே.எஸ் சித்ரா, ஹரிகரன், உன்னிகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், சுஜாதா ஆகியோரின் குரலில் பாடல்கள் வெளியாகியது.

200 நாட்கள் ஓடி, 3 விருதுகளை குவித்த படம்: வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைந்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம், 29 ஜனவரி 1999 அன்று வெளியாகி 200 நாட்களைக் கடந்து ஓடியது. இப்படம் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, எம்ஜிஆர் கௌரவ விருது ஆகியவற்றை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌதாரி, நடிகை சிம்ரன், நடிகை விஜய் ஆகியோருக்கு பெற்றுத்தந்தது.

Thulladha Manamum Thullum (Photo Credit: @Josephoffl / @TBSTwizzle X)

திருப்புமுனையை தந்த படம்: ரசிகர்களின் மனதில் இருந்து நீங்காத இடம்பெற்ற காதல் காவியமான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம், நடிகர் விஜய் மற்றும் நடிகை சிம்ரனின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனை படமாகவும் கவனிக்கப்பட்டது. வாலியில் அறிமுகமான சிம்ரனுக்கு, இப்படத்தின் வெற்றிக்கு பின் அடுத்தடுத்து பல படவாய்ப்புகள் குவிந்து நட்சத்திர நடிகையாக அவர் வலம்வந்தார்.

ரசிகர்களின் சிறப்பு வீடியோ காணொளி:

சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்ட அருமையான காதல் படங்களில் அட்டகாசமான ஒன்று: