US Navy Flag (Photo Credit: TheInsidePaper X)

ஜனவரி 29, ஜோர்டன் (World News): மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல் - பாலஸ்தீனியம் (Israel Palestine War) இடையே தொடங்கிய போர் தற்போது வரை நடைபெற்ற வருகிறது. பாலஸ்தீனத்தைச் சார்ந்த ஹமாஸ் பயங்கரவாத குழுவை ஒழிக்காமல் நாங்கள் ஓய மாட்டோம் என்ற முடிவில் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்பட இருக்கிறார். போரின் தொடக்கத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் (Hamas Group) கொடூரமான கொலைகள் மற்றும் பெண்கள் கடத்தல் சம்பவத்தால் அமெரிக்கா (US) இஸ்ரேலின் பக்கம் நின்றது.

இஸ்ரேல் - பாலஸ்தீனிய போரின் விளைவு இருதரப்பு இழப்பே: அதனைத்தொடர்ந்து, இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்குள் நடத்திய பல்முனை தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 26,422 பேர் பலியானதைத்தொடர்ந்து, உலக நாடுகள் பாலஸ்தீனத்திற்கு அத்தியாவசிய, மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் (Middle East Countries) இஸ்ரேலுக்கு எதிராக இருக்கும் எகிப்து, ஈரான் உட்பட பிற நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளை நேரடியாக எதிர்த்து தங்களது கருத்துக்களை முன்வைத்து வந்தன.

அமெரிக்காவுக்கு எதிரான முழக்கம்: சட்டவிரோதமாக திரை மறைவில் பயங்கரவாத குழுக்கள் நேரடியாக பாலஸ்தீனத்திற்கு ஆதரவு வழங்கியது. ஏமனின் கிளர்ச்சிப்படையான ஹவுதி (Houthi Group) அமைப்பினர், செங்கடல் மற்றும் மத்திய கிழக்கு கடல்களில் செல்லும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் வணிகப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும், சிறைபிடிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து அதனை செய்தும் காண்பித்தனர். Dog Attack: திடீரென இளைஞரின் மீது பாய்ந்து அந்தரங்க பகுதியில் தாக்கிய நாய்; பதறவைக்கும் காட்சிகள் வைரல்.! 

Israel Palestine War Visuals (Photo Credit: X)

அதிகரிக்கும் பதற்றமான சூழல்: இதனால் மத்திய கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா அதிகரிக்க, பொற்பாதற்றம் அதிகரித்தது. இந்த போர் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், அமெரிக்காவுடன் அங்குள்ள நாடுகள் மற்றும் அரசுக்கு எதிரான அமைப்புகள் சண்டையிட்டு வருவதால் உலகளாவிய அச்சமும் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு சொந்தமான படைத்தளத்தில் தாக்குதல்: இந்த நிலையில், நேற்று ஜோர்டானில் உள்ள அமெரிக்க படைத்தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் மூன்று அமெரிக்க துருப்புகள் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். டிரோன் தாக்குதல் மூலமாக அமெரிக்க படையினர் கொல்லப்பட்டது உறுதியானது. இதனால் போர் மற்றொரு புதிய பாதையில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக ஈரான் இருக்கலாம் என்று சந்தேகப்படுவதால், அமெரிக்கா ஈரானுக்கு எதிராக நேரடி தாக்குதல் நடத்த வேண்டும் என்ற முடிவில் அமெரிக்க அதிகாரிகள் தங்களின் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். Gold Smuggling: தங்கம், வெள்ளியை வைத்து மின்சாதன பொருட்கள் உருவாக்கி புதிய கடத்தல் திட்டம்; அதிகாரிகளிடம் சிக்கிய தங்கம்.! 

Houthis Hijack Cargo Ship | Visual Taken from Video (Photo Credit: X)

உலகளாவிய போர் அச்சம் அதிகரிப்பு: இதனால் விரைவில் மத்திய கிழக்கில் பெரும் போர் ஏற்படலாம் என்ற அச்சமும் உருவாகி இருக்கிறது. உலகளவில் இராணுவ ரீதியாக உயரிய கட்டமைப்பை கொண்டுள்ள அமெரிக்கா, தனது படைகளின் இழப்பு ஏற்படவாத வரை போரை மிதமான வேகத்தில் எடுத்து செல்லும் என்பதும், துருப்புகள் பலியானால் போர் தாக்குதல் நடக்கும் என்பது அவர்களின் கடந்த கால வரலாறு. தற்போது அதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதால், விரைவில் பெரிய தாக்குதலை அமெரிக்கா? முன்னெடுத்து உலகளாவிய பதற்றத்தை அதிகரிக்குமா? என்ற கேள்வி எழுதினத்துள்ளது.

ட்ரம்ப் விமர்சனம்: அமெரிக்க படையினர் பலியானது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "நமது நாடு ஜோ பைடன் தலைமையிலான தளபதியை வைத்துக்கொண்டு வாழ முடியாது" என்று கூறியுள்ளார்.